கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் சுமார் 10 ஆயிரம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திட்டக்குடி அருகே உள்ள பெண்ணாடம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்ட விவசாயிகளின் நெல் மூட்டைகள் நேற்று பெய்த மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு நெல்கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்ட நெல்மூட்டைகளை அதிகாரிகள் இதுவரை வாங்க முன்வராத நிலையில், அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை விவசாயிகளே பாதுகாத்து வரும் நிலையில், நேற்று பெய்த மழையில் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துஉள்ளதாகவும், கடனை வாங்கி நெல் பயிரிட்டு, ஆட்களுக்கு கூலி கொடுத்த அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களில் கொடுத்தால், அதை முறையாக வாங்க அதிகாரிகள் வருவது இல்லை என்று குற்றம் சாட்டும் விவசாயிகள் தங்களது நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளதுடன், தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், நெல்மூட்டைகளை பாதுகாக்க அரசு, உரிய நடவடிக்கை எடுத்து, இந்த பகுதியில் ஷெட் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.