டெல்லி: எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வரும் நிலையில்,  எதிரொலி: பாராளுமன்றத்தில் விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம் என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்டு 21ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடர் இதுவரை எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை நடவடிக்கைகள் முடங்கி உள்ளன. பாராளுமன்றத்தின் இரு அவைகளி லும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தினமும் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது. ஆனால் தேர்தல் கமிஷனின் பீகார் சீர்திருத்த நடவடிக்கை குறித்து விவாதிக்க மறுத்திய அரசு மறுத்து வருகிறது. இதனால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு இரு அவைகளையும் முடக்கி வருவதால், அலுவல் பணிகள் மட்டுமின்றி பலகோடி  மக்கள் பணமும் விரயமாகி வருகிறது

இந்த நிலையில்  ‘எதிர்க்கட்சிகளின் விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம்’ என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதால், எதிர்க்கட்சிகளின் ஆதரவு தேவையில்லை என்ற நிலையில், தங்களது மசோதாக்களை நிறைவேற்றுவோம் என அறிவித்துள்ளத.