சென்னை: தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில்  தமிழக வெற்றிக்கழகம் சேர்க்கப்பட்டு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நடிகர் விஜய் கட்சியான   தமிழக வெற்றிக்கழகத்தை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் சேர்க்க கோரி கடந்த ஆண்டு டெல்லியில் உள்ள அகில இந்திய தேர்தல் ஆணையத்தில் தவெக தரப்பில் மனு கொடுக்கப்பட்டது. அதை ஆய்வு செய்த இந்திய தேர்தல் ஆணையம்,  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தவெகவே அரசியல் கட்சியாக பதிவு செய்து  உத்தரவிட்டது. இந்த உத்தரவை பின்பற்றி, மாநில தேர்தல் ஆணையமும் தமிழக வெற்றிக்கழகத்தை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் சேர்த்து தற்போது அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

தவெக கட்சியியி தலைமையகம் பனையூர்,  கிழக்கு கடற்கரை சாலை முகவரியில் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுபோல,  விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றையும்  அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் பட்டியலில்  மாநில தேர்தல் ஆணையம் இணைத்துள்ளது.