சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் இன்று ஓய்வுபெறும் நிலையில், நேற்று மாலை திடீரெ இடைநீக்கம் செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆர். வேல்ராஜ் செயல்பட்டு வந்தார். ஆளுநர் விஷயத்தில், தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இவர் ஆளுநருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாடு அரசு வேல்ராஜை சில காலமாக புறக்கணித்து வந்தது.
இந்த நிலையில், வேல்ராஜ் ஆகஸ்டு 1ந்தேதியுடன் பணி ஓய்வுபெறும் நிலையில், அவரை தமிழ்நாடு அரசு சஸ்பெண்டு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இது பல்கலைக்கழக மட்டத்தில் சலசலப்பை ஏடற்படுத்தி உள்ளது.
வேல்ராஜ் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தபோது, முழுமையான கட்டமைப்புகள் இல்லா சில தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கி யதில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஒருவர் அளித்த புகாரி பேரில், பல்கலைக்கழகத்தின் உயர்மட்டக் குழுவான சிண்டிகேட் கூடி வேல்ராஜை பணியிடை நீக்கம் செய்ய முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த முடிவு, அவர் ஓய்வுபெறும் கடைசி நாளான வியாழக்கிழமை எடுக்கப்பட்டுள்ளது.
ஆர். வேல்ராஜ், 2021 முதல் 2024 வரை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி வகித்தார். அதன் பிறகு, அவர் தனது தாய் துறையான எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் (Institute of Energy Studies) பேராசிரியராகத் திரும்பினார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் பட்டம் பெற்ற இவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் எரிசக்திப் பொறியியலில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார். 1992-ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக தனது பணியைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.