பாஜக – ஓ.பி.எஸ். உறவு முறிந்ததாக பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
2026 தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறும் என்று கூறப்பட்டது.

கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓ.பி.எஸ்.க்கு தொண்டர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் செல்வாக்கு குறைந்தது தெரியவந்தது.
இதையடுத்து தமிழக அரசியலில் சற்று விலகியிருக்கும் ஓ.பி.எஸ். கடந்த சில வாரங்களுக்கு முன் பிரதமர் மோடியை சந்திக்க முயற்சி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஓ.பி.எஸ்.ஸை சந்திக்க மோடி மறுத்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் பாஜக உடனான உறவை முறித்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணியில் இருந்து ஓ.பி.எஸ். வெளியேறவேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன் கூறியிருந்த நிலையில்.
இதுகுறித்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று ஓ.பி.எஸ். தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஓ.பி.எஸ். – பாஜக இடையிலான உறவு முறிந்ததாகவும், ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று அறிவித்துள்ளார்.