டெல்லி: மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும், மேற்கு வங்கத்தில் மேற்கு வங்கத்தில் 70க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் NMC விதிமுறைகளுக்கு இணங்க வில்லை என நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்தியஅமைச்சர் தெரிவித்துள்ளார். அரசு ஒப்புதல் இல்லாமல் மருத்துவ கல்லூரி செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.
2024-25 ஆம் ஆண்டில் 34 மருத்துவக் கல்லூரிகளும், 2025-26 ஆம் ஆண்டில் 37 மருத்துவக் கல்லூரிகளும் பல்வேறு அளவுருக்களில் குறைபாடுடையதாகக் கண்டறியப்பட்டதாக மத்திய அமைச்சர் அனுப்ரியா படேல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, அரசு மற்றும் தனியார் வசதிகள் இரண்டிற்கும் தேசிய மருத்துவ ஆணையத்தால் காரணம் கேட்கும் அறிவிப்புகள் அனுப்பப்பட்டதாக கூறிய சுகாதாரத் துறை இணையமைச்சர் படேல், அங்கு நடத்திய ஆய்விபோது, போதுமான ஆசிரியர்கள், கட்டமைப்புகள் இல்லை என்பது கண்டறியப்பட்டது என்றும், 2024-25 ஆம் ஆண்டில் இந்த அளவுருக்களில் குறைபாடுள்ளதாகக் கண்டறியப்பட்ட வசதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது, அதே நேரத்தில் 2025-26 ஆம் ஆண்டில் இணங்காதவற்றுக்கு MBBS இடங்களை நிபந்தனையுடன் புதுப்பிப்பது மட்டுமே வழங்கப்பட்டது என்று அவர் கூறினார்.
அங்குள்ள சஞ்சிபன் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி NMCயின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுவது கண்டறியப்பட்டது, மேலும் மே 19 அன்று ஒரு குறிப்பு வெளியிடப்பட்டது. NMCயின் இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் (UGMEB) மே 19 அன்று அனைத்து பங்குதாரர்களுக்கும் NMCயின் தேவையான ஒப்புதல்கள் இல்லாமல் நாட்டில் இயங்கும் அங்கீகரிக்கப்படாத மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிராக ஒரு ‘எச்சரிக்கை’ அறிவிப்பை வெளியிட்டது.
இந்த வசதிகள் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படாத மருத்துவப் படிப்புகளில் அங்கீகாரம் பெற்றதாகக் கூறி மாணவர்களையும் பெற்றோர்களையும் தவறாக வழிநடத்துகின்றன என்று தெரிவித்துள்ளார். ஆனால், இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்றும் எச்சரித்துள்ளார்.