ரஷ்யாவின் இந்து அதிகாலை ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பசிபிக் பிராந்தியத்தில் பல்வேறு நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கிழக்கே கம்சாத்கா தீபகற்பத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட 8.7 அளவிலான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின திறந்தவெளியில் நிற்கவும் முடியாமல் பலர் தள்ளாடினர்.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து ரஷ்யாவின் கிழக்கு பிராந்தியத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

4 மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பும் என்று எச்சரிக்கப்பட்டது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறினர்.

இந்த நிலையில் ஜப்பான், சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதி மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் ஹவாய் தீவு உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அந்நாட்டு அரசுகள் கூறியுள்ளன.

இந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ரஷ்யா அருகே கடற்கரையில் திமிங்கலங்கள் கரைஒதுங்கியதாகக் கூறப்படுகிறது.

திமிங்கலங்கள் கரையொதுங்கியுள்ளதால் கடலில் மேலும் நிலநடுக்கம் அல்லது சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.