புவனேஸ்வர்

ந்திய ராண்வத்தின் பிரலே ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது/

இந்திய ராணுவத்தால் போர்முனைகளுக்கு உதவும் மேம்படுத்தப்பட்ட புதிய ரக ஏவுகணை ஒன்று  வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. பிரலே எனப்படும் இந்த வகை ஏவுகணை 500 முதல் 1000 கிலோ எடை கொண்ட குறுகிய தூர இலக்கை தாக்கும் திறன் கொண்டது. 500 கி.மீட்டருக்கு குறைவான தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது பிரலே ஏவுகணை. இது இந்திய ராணுவ மேம்பாட்டு ஆராய்ச்சி அமைப்பால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.

பிரலே ஏவுகணை, ஒடிசா மாநிலம் கடற்ரையில் உள்ள அப்துல்கலாம் தீவில் நேற்றும், நேற்று முன்தினமும் சோதித்து பார்க்கப்பட்டது. சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டது.

‘நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பிரலே ஏவுகணை எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஆயுதப்படைக்கு வலு சேர்க்கும்’ என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். சோதனை வெற்றிகரமாக நடக்க உழைத்த விஞ்ஞானிகளை அவர் பாராட்டினார்.