சென்னை: 2026ம் ஆண்டுக்குள், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் யுபிஐ பண பரிவர்த்தனையை முழுமையாக கொண்டு வர  தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கா பணிகள் அரசு நிறுவனமான எல்காட் மூலம்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு உணவுப்பொருள் பாதுகாப்புதுறை அமைச்சர்  ஐ.பெரியசாமி, கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரிலேயே  ரேஷன் கடைகளில்,  பணம் பரிமாற்றத்துக்கு பதிலாக, டிஜிட்ட வகையிலான யுபிஐ, கூகுள் பே, பேடிஎம் வசதி அறிமுகம் செய்யப்படும் என்றும், இந்த வசதி  படிப்படியாக விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக  தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு முடுக்கி விட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும்  அடுத்த ஆண்டுக்குள் (2026), மாநிலம் முழுவதும் உள்ள 37,328 நியாய விலைக் கடைகளிலும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) பரிவர்த்தனைகளை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, மாநிலம் முழுவதும் ஏற்கனவே  37 மாவட்டங்களில் பொது விநியோக முறையின் (PDS) கீழ் உள்ள 10,661 கடைகள் ஏற்கனவே பணமில்லா கட்டணங்கள் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்தி உள்ள நிலையில், விரைவில் மற்ற அனைத்து கடைகளுக்கும் விரிவாக்கம் செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ரேசன் கடைகளில் கட்டணமில்லா வசூல் முறையை ஊக்குவிக்கும் வகையில் மொபைல் முத்தம்மா எற்ற பெயரில் தமிழ்நாடு அரசும், யுபிஐ பண பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையை நவீனமயமாக்கல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ரேசன் கடைகளில் யுபிஐ பண பரிவர்த்தனை தொடங்கப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக, ரேசன் கடைகள் புதுப்பிக்கப்பட்டு,  ISO தரச் சான்றிதழ்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ரேசன் கடைகளில்,  ELCOT ஸ்கேனர்கள் மற்றும் POS சாதனங்களை வாங்குவதை எளிதாக்கும், இது அட்டை மற்றும் QR குறியீடு கட்டணங்களை ஆதரிக்கும் என்று  தெரிவித்துள்ள உணவுபொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள்,  ரேஷன் கடைகளில் POS சாதனம் மற்றும் கடையில் உள்ள கணினியுடன் இணைக்கப்பட்ட தானியங்கி பில் ஜெனரேட்டர் இயந்திரங்களும் கிடைக்கும். ஒவ்வொரு தொகுப்பும் பில்லிங் இயந்திரம் உட்பட சுமார் ₹20,000 செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது ஏற்கனவே கட்டணக் கண்காணிப்பை ஒழுங்குபடுத்தவும், கொள்முதல் நேரங்களைக் கண்காணிக்கவும், ஊழியர்கள் மட்டத்தில் வருவாய் கசிவைத் தடுக்கவும் உதவியுள்ளது என்று தெரிவித்த அதிகாரிகள் ,  “நகரத்தில் அம்மா உணவகங்கள் மொத்தமாக பொது விநியோக ரேஷன் பொருட்களைப் பெறுவதாக எங்களுக்கு புகார்கள் வந்தன. QR அல்லது டிஜிட்டல் கட்டண முறை மூலம், இதுபோன்ற திருட்டுகளும் குறையும்,” என்று துறையின் அதிகாரி ஒருவர் கூறினார்.

தமிழ்நாட்டில், 2.25 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பனை எண்ணெய், பனை வெல்லம் மற்றும் தினை ஆகியவற்றை விநியோகிக்கும் நாட்டின் மிகப்பெரிய பொது விநியோக வலையமைப்புகளில் ஒன்றை மாநிலம் இயக்குகிறது. இந்த விற்பனை நிலையங்களில், 35,181 கடைகள் கூட்டுறவுத் துறையாலும், 1,527 கடைகள் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் (TNCSC), 152 கடைகள் பிற கூட்டுறவுகளாலும், 468 கடைகள் பெண்கள் சுயஉதவிக் குழுக்களாலும் நடத்தப்படுகின்றன.

டிஜிட்டல் கட்டணங்கள் ISO சான்றிதழ் பெறுவதற்கான அளவுகோல்களில் ஒன்றாகும். இதுவரை, 10,149 நியாய விலைக் கடைகள் தரத்திற்கான ISO 9001 சான்றிதழைப் பெற்றுள்ளன, மேலும் 2,059 கடைகள் சேமிப்பு பாதுகாப்பிற்கான ISO 28000 சான்றிதழைப் பெற்றுள்ளன.

ரேஷன் கடைகளில் யுபிஐ வசதி!  அமைச்சர் பெரியசாமி தகவல்…

டிஜிட்டல் பயனர்களே கவனம்: ஆகஸ்டு 1முதல், ஜிபே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்?