சென்னை
முதல்வர் மு க ஸ்டாலின் இன்று பிரதமர் மோடியிடம் ஒரு கோரிக்கை மனுவை அனுப்பி வைத்துள்ளார்.

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியிடம், தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கோரிக்கை மனு அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர், தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அளிக்கப்பட வேண்டிய கோரிக்கை மனுவிற்கு முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்தார். அப்போது கனிமொழி எம்.பி. மற்றும் முதல்-அமைச்சரின் செயலாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
முதல்-வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில்,
“நான்ஆஸ்பத்திரியில இருப்பதால், பிரதமரிடம் வழங்குவதற்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச் செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பியுள்ளேன். நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதை பிரதமரிடம் வழங்குவார்’ என்று தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில், ‘ஆஸ்பத்திரியில் இருப்பதால், பிரதமரிடம் வழங்குவதற்கான கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச் செயலாளர் மூலமாக கொடுத்து அனுப்பியுள்ளேன். நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதை பிரதமரிடம் வழங்குவார்’
என்று பதிவிட்டுள்ளார்.