டோக்கியோ: தமிழ்நாட்டின் நாடி ஜோதிடம் எல்லாவற்றையும் மாற்றியது என உத்தரகாண்டில் இருந்து கன்வர் யாத்திரை மேற்கொள்ளும் சிவபக்தரான ஜப்பான் தொழிலதிபர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் நாடி ஜோதிடம் – அதன்பிறகு வந்த கனவால், சிவபக்தராக மாறிய ஜப்பான் தொழிலதிபர், தற்போது, பால கும்ப குருமுனி என்ற பெயரில் கடந்த 20ஆண்டுகளாக உத்தரகாண்டில் இருந்து கன்வர் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இது ஆச்சரியத்தை மட்டுமின்றி இந்து மதம் மற்றும் ஆன்மிகத்தின் மீதான பற்றுதலையும் ஏற்படுத்தி உள்ளது. வெளிநாட்டினரின் இந்திய கடவுகள் மீதான பிடிப்பு இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவின் ஆன்மிகம், கலாச்சாரம் இந்திய மக்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ, உலக நாடுகளின் மக்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. இதனால்தான், பல வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலாவாக கலாச்சார பயணமாக வந்து செல்கின்றனர். அதுபோல ஏராளமான வெளிநாட்டினர் இந்தியர்களை திருமணம் செய்து கொள்வதிலும், இந்து தர்மத்திலும் ஆர்வம் கொள்வதுடன், இந்தியாவில் வசிக்க ஆர்வம் கொண்டுள்ளனர். பலர் இந்து மதத்தின்மீதான பற்றுதலால் ஆன்மிகவாதிகளாக மாறி வருகின்றனர். 2025 ஜனவரியில் நடைபெற்ற உ.பி. மாநிலல் பிரக்யாராஜில் நடைபெற்ற மாபெரும் கும்பமேளாவில் ஏராளமான வெளிநாடுகளைச் சேர்ந்த யாத்ரீகர்கள் கலந்துகொண்டு கங்கையில் நீராடி சென்றதை அனைவரும் பார்த்திருப்போம்.
அதுமட்டுமின்றி, இந்த நூற்றாண்டின் அற்புத கண்டுபிடிப்பான கையடக்கத் தொலைதொடர்புக் கருவிகளை அறிமுகப்படுத்தியவரான ஆப்பிள் கம்ப்யூட்டர், மொபைல் போன்ற எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனரான ஸ்டீப் ஜாப்ஸ் குடும்பத்தினர், இந்தியா வந்து கங்கையில் நீராடி சென்றது அனைவரும் நினைவிருக்கலாம். ஸ்டிவ் ஜாப்ஸ், கடந்த 1970ம் ஆண்டு வாக்கில் முன்முறையாக மனசாந்தியைத் தேடி இந்தியாவுக்கு வந்தார். ஹிமாலயத்திலிருந்து திருவண்ணாமலைவரை சுற்றியலைந்தார். நிறைவாக உத்தரகாண்ட் மாநிலம் கைஞ்சியில் உள்ள ஞானி நீம் கரோலி பாபா ஆசிரமத்தில் அடைக்கலம் புகுந்து ஆன்மிகத்தை தேடிய நிலையில், அதன் வாயிலாக வாழ்வில் மிகப்பெரிய உச்ச நிலையை அடைந்தார். இதையடுத்து அவர் ஆண்டுதோறும் இந்தியா வருவது மட்டுமின்றி தனது மனைவி என குடும்பத்தினரையும் இந்தியா அழைத்து வந்து ஆன்மிக மழையில் திளைக்க வைத்து வருகிறார்.

அதே வரிசையில் ஜப்பான் நாட்டின் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான டோக்கியோவைச் சேர்ந்த ஹோஷி தகாயுகி என்பவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு சுற்றுப்பயணமாக வந்தவர், தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தமிழ்நாட்டின் பிரபலமான கோவில்களுக்கு சென்றதன் மூலம் கிடைத்த ஞானத்தாலும், கடலூர் மாவட்டத்தில் உள்ள வைத்திசுவரன் கோவில் எனப்படும் சிவன் கோவிலில் தரிசனம் செய்து மேலும் ஞானத்தை பெற்றார். அந்த பகுதியில், பரவலாக காணப்படும் நாடி ஜோதிடத்தில் தனது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலத்தை அறிந்து கொண்டதுடன், அதன்பிறகு தீவிர சிவபக்தராக மாறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து ஹோஷி தகாயுகி கடந்த இருபது ஆண்டுகளாக உத்தரகாண்ட் வருகை தந்து அங்கிருந்து இமயமலைக்கு கன்வர்யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நடப்பாண்டும், அவர் கன்வர் யாத்திரையில் ஈடுபட்டுள்ளார்.
கன்வர் யாத்திரை என்பது, சிவபெருமானின் பக்தர்கள் பக்தர்கள் காவி நிற உடை அணிந்து தங்கள் இரு தோள்களிலும் ‘கன்வர்’ சுமந்து செல்கின்றனர். அதாவது, இயமமலையில் உள்ள சிவனை தரிசிக்க சிவன் பக்தர்களான கன்வாரியர்கள், கங்கை நதியிலிருந்து புனித நீரை எடுத்து, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய யாத்திரை மேற்கொள்வார்கள். இந்த யாத்திரை “கன்வர் யாத்திரை” என்று அழைக்கப்படுகிறது. இந்த யாத்திரை ஜூலை நடுப்பகுதியில் இருந்து ஆகஸ்ட் வரை நடைபெறுகிறது.
இந்த யாத்திரையில் ஈடுபட்டுள்ள ஜப்பான் தலைநகர் டோக்கியோவைச் சேர்ந்த ஹோஷி தகாயுகி செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த 20ஆண்டுகளுக்கு முன்பு தான், தமிழ்நாட்டில் பார்த்த நாடி ஜோதிட அமர்வு, அதன்பிறகு தனக்கு வந்த கனவு ஆகியவை தன்னை தீவிர சிவபக்தனாக மாற்றியது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்த மழைக்காலத்தில் ஹரித்வாருக்குச் செல்லும் காவி உடை அணிந்து செல்லும் கன்வர் யாத்ரீகர்களில், டோக்கியோவைச் சேர்ந்j ஹோஷி தகாயுகி ஒருவர், சிவபெருமானின் பாதையைப் பின்பற்றுவதற்காக தனது செழிப்பான தொழிலை விட்டுவிட்டுச் இன்று சாதுவாக இமயமலை நோக்கி பயணம் சென்று கொண்டிருக்கிறார். இது எவரும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வு மட்டுமின்றி, இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஆன்மிகத்தீன் மீதான பிடிப்பு என்பதையும் மறுக்க முடியது.

யார் இந்த ஹோஷி தகாயுகி ?
51 வயதான ஹோஷி தகாயுகி, ஒரு காலத்தில் ஜப்பானில் 15 அழகு சாதனப் பொருட்கள் கடைகளின் வெற்றிகரமாக நடத்தி வந்தவர். ஆனால் இன்று, அவர் பால கும்ப குருமுனி என்ற ஆன்மீகப் பெயரால் அறியப்படுகிறார். ஒரு சாதுவைப் போல உடையணிந்து, தனது 20 சீடர்களுடன் பயணம் செய்து, அவர் ஒரு சிறப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்: கன்வர் யாத்திரையில் இமயமலையில் நடந்து செல்வது தனது கடந்த கால வாழ்க்கையுன் தொடர்பு உடையது என்று பக்தியுடன் கூறுகிறார்.
தமிழ்நாட்டில் தொடங்கிய ஆன்மீக பயணம்
ஹோஷி தகாயுகி, 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் இருந்து தமிழ்நாட்டிற்கு சுற்றுலா பயணியாக வந்தவர். இந்தியாவின் கலாச்சாரம், ஆன்மிகம், தமிழ்நாட்டின் பாரம்பரியம், இங்கு காணப்படும் ஏராளமான பண்டைய கோவில்கள், தமிழர்களின் சிற்ப கலைகள் போன்றவையுடன், எங்கு நோக்கிலும் ஆன்மிக ஸ்தலங்களும், சிவாலயங்களும், சைவ வைணவ ஆணங்களையும் கண்டு பிரமித்தவர், தமிழ்நாடு ஆன்மிக மாநிலமாக திகழ்வதை கண்டு ஆச்சரியமடைந்தார்.
இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள வைத்திஸ்வரன் கோவில் சென்று அங்குள்ள சிவனை வழிபாடு செய்த நிலையில், அங்கு பிரபலமான நாடி ஜோதிடம் குறித்து கேள்விப்பட்டு, அதை தானும் தெரிந்து கொள்ள எண்ணினார்.
அந்த பகுதியில் பரவலாக காணப்படும் பண்டைய பனை ஓலைச்சுவடிகள் ஜோதிடம் (நாடி ஜோதிடம் ) குறித்து, தனது வாழ்க்கை குறித்து அறிய ஆசைப்பட்டு நாடி சோதிடம் எனப்படும பனை ஓலைகளை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய வாசிப்பு வடிவமான நாடி ஜோதிடம் பார்த்து, அதன்மூலம் தனது கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் குறித்து கேட்டு வியப்படைந்தார்.
நாடி ஜோதிடம் வாசிப்பின்போது, தான் கடந்த காலத்தில் இமயமலையில் சிவபக்தனாக வாழ்ந்ததும், இனிமேல், இந்து ஆன்மீகத்தைப் பின்பற்ற தனக்கு விதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்குச் சொல்லப்பட்டது.
இதுகுறித்த சிந்தனைகளுடனேயே டோக்கியோவுக்குத் திரும்பிய ஹோஷி தகாயுகிக்கு சில நாட்களிலேயே ஒரு தெளிவான கனவு வந்ததாகவும், அநத் கனவில், ஹோஷி தகாயுகி உத்தரகாண்ட் மாநிலம் .டெஹ்ராடூனுக்குப் பயணம் செய்யும் போது “கடந்த கால வாழ்க்கையில் நான் உத்தரகண்டில் இருப்பதை கண்டேன் ,” என்று கூறியவர், தனக்கு வந்த “அந்தக் கனவு தனது வாழ்க்கை உள்பட எல்லாவற்றையும் மாற்றியது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

சிவ பக்தரான ஹோஷி தகாயுகி
இதைத்தொடர்ந்து, இந்தியா மற்றும் இந்தியாவின் அடித்தனமான இந்துமதம் குறித்த ஆர்வம் அதிகரித்துடன், தனது இந்திய பயண அனுபவங்களால் ஈர்க்கப்பட்ட ஹோஷி, தனது பெரும் தொழிலை தனது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விட்டு, தன்மைப்போல இந்து மதத்தின்மீது பற்றுள்ள சிலரை சீடர்களாக எற்றுக்கொண்டு ஆன்மீக வாழ்க்கையைத் தழுவினார். இதைத்தொடர்ந்து அவர் ஜப்பானில் ரண்டு சிவன் கோயில்களைக் கட்டியுள்ளார், ஒன்று அவரது டோக்கியோ வீட்டிற்குள்ளும் மற்றொன்று அருகிலும் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமானோர் வந்து சிவனை தரிசித்து செல்வதாக கூறும் தகாயுகியுன் சிவன்மீதானபக்தி அலாதியாகவும், ஆழமாகவும் உள்ளது. இதன் காரணமாக, தகாயுகி, இப்போது ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பயணம் செய்து, சிவபெருமான் மீதான தனது அன்பைப் பரப்புவதில் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக தற்போது வடமாநிலங்களில் இயமலையில் உள்ள சிவனை தரிசிக்க செல்லும் கன்வர் யாத்திரையில் இணைந்துள்ளார். தனது யாத்திரையின் ஒரு பகுதியாக டேராடூனில் கன்வாரியாக்களுக்கான இரண்டு நாள் உணவு முகாமை நடத்தியவர், அவர்களுடன் சேர்ந்து யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
ஹோஷி இத்துடன் நிற்கவில்லை. இந்தியாவிலும் சிவன் கோவில் ஒன்றை கட்ட ஆசைப்படுவதுடன், அதற்காக புதுச்சேரியில் 35 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். அங்கு அவர் ஒரு பெரிய சிவன் கோயிலைக் கட்ட திட்டமிட்டு உள்ளதாகவும், அதுபோல தனக்கு பிடிந்த இடமான உத்தரகண்டில் விரைவில் ஒரு ஆசிரமத்தைத் திறக்கவும் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் இந்தியாவின் தேவபூமி உத்தரகாண்டுடன் எனக்கு ஆழமான தொடர்பு இருப்பதாக உணர்கிறேன்,” என்று கூறும் ஹோஷி கூறுகிறார். “நான் முன்பு இங்கு வாழ்ந்தேன் என்று நம்புகிறேன், இன்னும் மலைகளில் உள்ள எனது பழைய கிராமத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.” என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இந்து மதத்தின்மீதான ஜப்பான் தொழிலதிபர் ஹோஷி தகாயுகியின் உணர்ச்சிமிகு தகவல் நம்மை புல்லரிக்க வைக்கிறது.