டெல்லி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மோசடி செய்ய அனுமதித்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார்.

நேற்று நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம்
”கர்நாடகத்தில் உள்ள ஒரு தொகுதியில் தேர்தல் ஆணையம் மோசடியை அனுமதித்துள்ளது. இந்தியாவில் வாக்குகள் திருடப்படுகிறது; கர்நாடகத்தில் வாக்கு திருட்டு எவ்வாறு நடைபெற்றது என்பதைத் தனது கட்சி கண்டுபிடித்துள்ளது. அதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது
பிகாரில் நடந்துவரும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் வீடு வீடாகச் சென்று பார்வையிட்டபோது, தேர்தல் அதிகாரிகள் இதுவரை 52 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் முகவரிகளில் இல்லை என்பதைக் கண்டறிந்தததாகத் கூறப்படுகிறது.
ஆனால்.பீகாரில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அங்குள்ள வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிப்பதை நோக்கமாகக் தேர்தல் ஆணையம் நோக்கமாக கொண்டுள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது”
என்று தெரிவித்துள்ளார்.