டெல்லி: பீகாரில் தீவிர வாக்கு மறுஆய்வு விவகாரத்தை கண்டித்து, காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்டு 21வரை மொத்தம் 21 அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அமர்வு தொடங்கியது முதல், எதிர்க்கட்சிகள் பீகாரில், நேபாளம், வங்க தேச அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குரிமைகளை பறிக்கும் வகையில் எடுத்து வரும் நடவடிக்கையை கண்டித்தும், சிந்தூர் ராணுவ நடவடிக்கை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அவையை முடக்கி வருகின்றன.
இந்த நிலையில், இன்று காலை அவை கூடுவதற்கு முன்பாக,. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பீகாரில் சிறப்பு தீவிர மறுஆய்வு (SIR) பயிற்சி விவகாரம் தொடர்பாக மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி.க்கள் கனிமொழி உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் மகர் துவாரில் போராட்டம் நடத்தினர்.