பாட்னா: ஆகஸ்டு முதல் வீடுகளுக்கு மாதம் ஒன்றுக்கு 125 யூனிட் மின்சாரம் இலவசம் என பீகார் மாநில முதல்வர், தனது மாநில மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். நிதிஷ்குமாரின் இந்த அறிவிப்பு வு மாநிலத்தில் 1.67 கோடி குடும்பங்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளில் பூகாரில் மாநிலத்தில் பாஜக, நிதிஷ் கட்சி கூட்டணி ஆட்சியை இரட்டை எஞ்சின் ஆட்சி என விமர்சித்து வரும் நிலையில், மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் பீகாரில் வீடுகளுக்கு 125 யூனிட் மின்சாரம் இலவசம் என அதிரடி அறிவித்துள்ளதுடன், இந்த நடைமுறை வரும் ஆகஸ்டு 1 முதல் நடைமுறைக்கு வருவதாகவும் கூறியுள்ளார்.

பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற உள்ளது. இதனால், அங்கு அரசியல் களம் அனல் பறக்கிறது. இதற்கிடையில், நோபாளம், வங்கதேசங்களைச் சேர்ந்த அகதிகளின் ஓட்டுரிமையை நீக்கும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, சுமார் 30 லட்சம் வாக்குகள் நீக்கப்படுகின்றன. இந்த வாக்குகளை நம்பி உள்ள காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தன. ஆனால், உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தடை விதிக்க மறுத்து விட்டது.
இந்தம நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மாதந்தோறும் 125 யூனிட் மின்சாரம் வீடுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில், ”பீகார் மக்களுக்கு தொடக்கத்தில் இருந்தே குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கி வருகிறோம். இந்த நிலையில், வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். அதன்படி ஜூலை மாத மின் கட்டணத்தில் நுகர்வோர்கள் 125 யூனிட் வரையிலான மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள 1 கோடியே 67 லட்சம் குடும்பங்கள் பயனடையும்” என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ”அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து வீடுகளிலும் அவரவர் விருப்பத்தை பெற்றுக் கொண்டு சோலார் பேனல்களை அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. மேலும், பொது இடங்களில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவி அதன் மூலம் மின்சாரம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் அரசு ‘குதிர் ஜோதி யோஜனா’ திட்டத்தின் கீழ் மிகவும் ஏழ்மையான குடும்பங்களின் வீடுகளில் சோலார் பேனல்களை அமைப்பதற்கான மொத்த செலவையும் ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளது. 125 யூனிட் இலவச மின்சாரம் மட்டுமின்றி, அடுத்த மூன்று ஆண்டுகளில் மாநிலத்தில் சுமார் 10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி கிடைக்கும் என்றும் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.
இந்த நிலையில், நிதிஷ்குமாரின் இலவச மின்சா அறிவிப்பை NDA கூட்டணி கட்சிகள் இது வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு என்று பாராட்டியது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. நிதிஷ் அரசாங்கம் தங்களின் திட்டங்களை நகலெடுப்பதாகவும், வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாக நேரத்தை கேள்விக்குள்ளாக்குவதாகவும் குற்றம் சாட்டின.