டெல்லி: வீட்டில் கட்டுக்கட்டாக பணம் குவித்து வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்கம் செய்யும் வகையில், நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு இம்பீச்மென்ட் (பதவி நீக்க தீா்மானம) கொண்டு வர இருக்கிறது. இதை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வா்மா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் ரிட் மனுவில், அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், நீதிமன்ற நீதிபதியாகக் கடந்த 11 ஆண்டுகளாக களங்கமற்ற வாழ்வை மேற்கொண்டதாகவும், விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்த நீதிபதிகள், தனது நிலை குறித்து விளக்கம் அளிக்க போதுமான வாய்ப்பு வழங்கவில்லை என்றும், அதனால், அவர்களது அறிக்கையில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய முக்கிய எதிா்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித் திருக்கும் நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இதற்கான தீா்மானத்தை மத்திய அரசு கொண்டுவர மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, வ
முன்னதாக, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் டெல்லியில் உள்ள இல்லத்தில் கடந்த மார்ச் மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தபோது கட்டுக் கட்டாக பணத்தை கைப்பற்றியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நீதிபதி வர்மா சர்ச்சையில் சிக்கினார்.
இதையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மூன்று நீதிபதிகள் கொண்ட விசாரணை அமைப்பை நிறுவி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதன்படி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா, கார்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது.