சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலரை கைது செய்து ஆஜர்படுத்த  காவல்துறைக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளராக ஜி.பிரகாஷ் ஐஏஎஸ் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும், அமுதா ஐஏஎஸ் உள்பட பலர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி மன்னிப்பு கோரிய நிலையில், தற்போது பிரகாஷ் ஐஏஎஸ்- ஆஜராகாத நிலையில், அவரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவர் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்தபோதே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். மேலும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். ஆனால், இவர் தற்போது திமுக அரசின் ஆதரவோடு முக்கிய பதவியில் அமர வைக்கப்பட்டு உள்ளார். இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த காவ்யா செல்ட்டர்ஸ் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக, ரத்தினசபாபதி என்பவர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் கட்டுமானம் தொடர்பான சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் உயர்நீதிமன்றம், சிஎம்டிஏ ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுபடி ஆவணங்களை வழங்காமல் சிஎம்டிஏ வழக்கை இழுத்தடித்து வந்தது.

இதையடுத்து, மனுதாரர், சிஎம்டிஏ  தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வழக்கை இழுத்தடிப்பு செய்வதாகவும், நீதிமன்ற உத்தரவுபடி,  ஆவணங்களை வழங்காமல் சிஎம்டிஏ காலதாமதம் செய்து வந்துள்ளதாகவும்  குற்றம் சாட்டி மற்றொரு மனு தாக்கல் செய்திதார்.

இந்த மனுவை ஏற்கனே விசாரித்த உரிமையியல் நீதிமன்ற நீதிபதி  ராஜ்குமார், இதுதொடர்பாக சாட்சியம் அளிக்க சிஎம்டிஏ உறுப்பினர் செயலருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தார் ஆனால்,   சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் தரப்பில் சம்மனை பெற மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த நீதிபதி,   சிஎம்டிஏ உறுப்பினர் செயலரை கைது செய்து  இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில்  நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என  காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரகாஷ் ஐஏஎஸ், கடந்த அதிமுக ஆட்சியின்போது மாநகராட்சி ஆணையராக இருந்தார். இவர் எடப்பாடியின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்து வந்தார். இதனால், முதல்வர் ஸ்டாலின் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

இதனால்  2021ல் தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்றதும்,   ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வரிசையாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர்.  அதன்படி,  சென்னை மாநகராட்சி முஆணையர் பிரகாஷ் மாற்றப்பட்டு,  பணி இடம் வழங்காமல் வைக்கப்பட்டார். பின்னர் சில மாதம் கழித்து, பிரகாஷ்  திறன் மேம்பாட்டுக் கழக இயக்குநராக நியமனம் செய்யப்பட்ட்டார். இந்த துறை வெறும் டம்மியானது. ஆனால் அடுத்த சில மாதங்களில் பிரகாஷ், திமுக அரசின் குட்புக்கில் இணைந்து,  பணம் கொழிக்கும் சிஎம்டிஏ உறுப்பினர் செயலாக நியமனம் செய்யப்பட்டார். இது விவாதப்பொருளாக மாறியது. இந்த நிலையில், அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறைவாக விலை அளித்த விலைப்புள்ளியை ரத்து செய்த சென்னை மாநகராட்சி