மதுரை: மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி அளவில் வரி முறைகேடு நடைபெற்றுள்ளது தொடர்பாக, 8 அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு உதவிய மேலும் 4 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த விவகாரத்தில் அதிகாரிகளுக்கு உடந்தையாக இருந்த. திமுகவைச் சேர்ந்த 5 மண்டலத் தலைவர்கள் மற்றும் 2 நிலைக் குழுத் தலைவர்கள் , கட்சி மேலிட உத்தரவின்படி, தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர்களும் கைது செய்யப்படுவார் களா என கேள்வி எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் தனியார் வணிகக் கட்டடங்களுக்கு குறைந்த சொத்து வரி விதித்து, அரசுக்கு 200 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படுத்திய முறைகேட்டில், முன்னாள் உதவி ஆணையர் உட்பட 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், மதுரை மாநகராட்சியில் பணியாற்றிய 5 மண்டலத் தலைவர்கள் மற்றும் 2 நிலைக் குழுத் தலைவர்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், மதுரை மாநகராட்சியின் முன்னாள் உதவி ஆணையர் உட்பட 8 அதிகாரிகளை கைது செய்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று (ஜூலை 16) மேலும் 4 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதாவது, பில் கலெக்டர் காளிமுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஒப்பந்த ஊழியர்களான பாலமுருகன், நாகராஜன் மற்றும் மகா பாண்டியன் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களும் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி விதிப்பில் ரூ.200 கோடி முறைகேடு: மதுரை மாநகராட்சியின் 6 மண்டல தலைவர்கள் ராஜினாமா….