டெல்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒடிசாவில் தீக்குளித்து மரணமடைந்த மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில்,

“ஒடிசாவின் பாலசோரில் நீதிக்கான போராட்டத்தில் தனது உயிரை இழந்த மாணவியின் தந்தையிடம் பேசினேன். அவரது குரலில், உயிரிழந்த மாணவியின் வலி, அவரது கனவு, போராட்டம் ஆகியவற்றை என்னால் உணர முடிந்தது.

இந்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியும் நானும் முழுமையாக அவருக்கு ஆதரவாக இருக்கிறோம் என்ற உறுதியை அளித்தேன். நடந்த சம்பவம் மனிதாபிமானமற்றது, வெட்கக்கேடானது. அது மட்டுமல்ல, அது முழு சமூகத்துக்கும் ஒரு காயம். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு முழுமையான நீதி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்”

எனப்  பதிவிட்டுள்ளார்.