திருவனந்தபுர,,
அமெரிக்க நாட்டுக்கு சிகிச்சைக்காக சென்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் நாடு திரும்பியுள்ளார்.

கடந்த 5 ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் உயர் சிகிச்சைக்காக அமரிக்கா சென்றிருந்தார். அவருக்கு 10 நாட்கள் அமெரிக்காவில் உள்ள மினசோட்டாவில் மாயோ மருத்துவமனையில் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
பினராயி விஜயன் சிகிச்சைக்கு பின் தனது மனைவி கமலா விஜயனுடன் கேரளா திரும்பினார். அவரை திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்த்தில்கேரளா தலைமைச் செயலாளர், மாநில காவல்துறைத் தலைவர் ஆகியோர் வரவேற்றனர்.
பிஅராயி விஜயன் இன்று முதல் தனது பணிகளை மீண்டும் தொடங்குவார் என்றும், வியாழக்கிழமை நடைபெறும் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel