சென்னை: திமுகவுக்கு தவறான தகவல்களை கொடுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்.  உங்களுக்கு திமுக முக்கியம் என்றால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேருங்கள். கட்சியில் சேர்ந்த பேட்டி கொடுங்கள்,. இல்லையேல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும்  பதில் சொல்ல நேரிடும் என முன்னாள் முதல்வரும்,  எதிர்க்கட்சி தலைவருமான  எடப்பாடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் பொதுவானர்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக-வுக்கு உடந்தையாக இருந்து விடாதீர்கள். உங்களுக்கு திமுக முக்கியம் என்றால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேருங்கள். கட்சியில் சேர்ந்து பேட்டி கொடுங்கள். தவறான தகவல்களை வழங்காதீர்கள் என்று எச்சரித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி , ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்று தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து பேசி வருகிறார்.  குறிஞ்சிப்பாடியில் பேசிய அவர், இந்த கூட்டத்தை நான் எழுச்சி பயணத்தில் மேற்கொள்கின்ற ஒரு நிகழ்ச்சியாக பார்க்கவில்லை. நமது வேட்பாளர் வெற்றிபெற்ற வெற்றி விழா நிகழ்ச்சியாக பார்க்கிறோம். அந்த அளவிற்கு மக்களிடையே எழுச்சி பார்க்கப்படுகிறது. திமுக ஆட்சி எப்போது அகற்றப்பட வேண்டும் என்ற நிலைலேயே மக்கள் இருக்கின்றனர். திமுக 200 தொகுதிகளின் வெற்றிபெறும் என்பதை கனவு காண்கலாம். ஆனால் அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்.

திமுக விஞ்ஞான ஊழல் கட்சி என்றும், ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார் என்றும் குற்றம் சாட்டினார். மேலும், நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் எதற்காக என்றும் கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்றும் எச்சரித்தார்.

. ஸ்டாலின் வீடு வீடாக நோட்டீஸ் கொடுப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்றார். நான்கு ஆண்டுகளாக மக்களைப் பற்றி சிந்திக்காதவர்கள், இப்போது நோட்டீஸ் கொடுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். 2021ல் மனுக்களைப் பெட்டியில் போடச் சொன்ன ஸ்டாலின், இப்போது எதற்காக நோட்டீஸ் கொடுக்கிறார் என்றும் விமர்சித்தார்.

திமுக தலைவர் ஸ்டாலின் வந்ததும் பலர் கட்சியை விட்டு வெளியேறிவிட்டதாகவும், இப்போது பிச்சை எடுப்பது போல் உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் சர்ச்சை ஆடியோவில், சபரீசன் மற்றும் உதயநிதி இருவரும் 30 ஆயிரம் கோடி ரூபாய் கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.

இரண்டு வருடத்திலேயே 30 ஆயிரம் கோடி கொள்ளையடித்த கட்சி தேவையா என்றும் அவர் ஆவேசமாக கேட்டார். இதற்கு ஸ்டாலின் இதுவரை பதில் சொல்லவில்லை என்றும் குற்றம் சாட்டினார். ஸ்டாலினின் தாரக மந்திரம் கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் என்றும் சாடினார்.

திமுக ஆட்சி அமைத்து 50 மாதங்கள் உருண்டோடிவிட்டது. இந்த 50 மாதங்களில் குன்னம் தொகுதிக்கு ஏதாவது ஒரு பெரிய திட்டத்தை கொண்ட வந்திருக்கிறார்களா? 50 மாதங்களில் மக்களை தந்திரமாக ஏமாற்றி திமுக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. மாதந்தோறும் மகளிர் உதவித்தொகையாக 1000 ரூபாய் கொடுப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். அவர் கொடுக்கவில்லை. மக்கள் வரிப்பணத்தில் இருந்து கொடுக்கிறார்கள். சொந்த பணத்தில் கொடுக்கிற மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்.

அதிமுக கடுமையான அழுத்தம் கொடுத்ததால் 28 மாதங்கள் கழித்து மாதந்தோறும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த உடனேயே கொடுத்ததாக தவறான கருத்தை பதிய வைத்துக் கொண்டிருக்கிறார்.

கரும்புக்கு 4000 ரூபாய், நெல்லுக்கு 2500 ரூபாய் தருவதாக சொன்னார்கள், ஆனால் இதுவரை கொடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். சட்டமன்றத்தில் கேட்டபோது, இன்னும் ஐந்து ஆண்டுகள் இருக்கிறது, கொடுப்போம் என்று சொல்கிறார்கள் என்றார்.

100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று கூறினார். சம்பளத்தை உயர்த்துவோம் என்று கூறினார். உயர்த்தினாரா? 100 நாள் வேலைத்திட்டம் 50 நாட்களாக தேய்ந்துவிட்டது. மு.க. ஸ்டாலின் எப்படி ஏழை மக்களை ஏமாற்றுகிறார் என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்காமல் பா.ஜ.க. அரசு அரசியல் செய்து வருகிறது – மு.க.ஸ்டாலின் கண்ணில் பார்க்க முடியாத காற்றை வைத்து ஊழல் செய்த கட்சி திமுக. திமுக அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தவர்கள். நாட்டுக்கு நன்மை செய்வோம் என்று இவர்கள் பேசுகிறார்கள்.

இவர்களை நம்பி ஆட்சியை கொடுத்த காரணத்தினால் மக்கள் துன்பத்தில் வாடிக் கொண்டிக்கிறார்கள். 1.05 கோடி  பேரிடம் மனு வாங்கப்பட்டு 1.01 லட்சம் மனுவுக்கு தீர்வு காணப்பட்டதாக சொல்கிறார்கள். என்னென்ன மனுக்கள் கொடுக்கப்பட்டன? எந்தெந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது? என விளக்கம் கொடுங்கள். விளக்கம் கொடுக்கப்பட வில்லை என்றால், அதிமுக ஆட்சி அமைத்த பிறகு இப்படி தவறாக புள்ளி விவரங்கள் கொடுத்ததற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் செய்தி தொடர்பு துறை மூலமாகத்தான் அரசு செய்திகள் வெளியிடப்படும். இதுதான் நடைமுறையில் உள்ளது. திமுக மக்களின் செல்வாக்கை இழந்துவிட்டது. செல்வாக்கை இழந்ததால் எப்படியாவது மக்களை குழப்பி, ஆட்சி வர வேண்டும். திட்டமிட்டு நான்கு கூடுதல் தலைமைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு நேற்றைய தினம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பேட்டி கொடுக்கிறார்.

நான்கு கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்திருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். ஒவ்வொரு அதிகாரிக்கும் 5 முதல் 10 துறைகளை ஒதுக்கியுள்ளனர். இப்படி நியமித்தால், அந்தந்த துறைகளின் அதிகாரிகள் என்ன வேலை செய்வது? மக்கள் செய்தி தொடர்புத்துறை என்ன ஆனது?

நான்கு ஆண்டுகள் செய்த நன்மைகளை சொல்லவா இந்த நியமனம்? உண்மை செய்திகளை சொல்ல வேண்டும். இல்லையென்றால், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பதில் சொல்ல வேண்டும் என்று எச்சரித்தவர், ஐஏஎஸ் அதிகாரிகள் பொதுவானர்கள். வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக-வுக்கு உடந்தையாக இருந்து விடாதீர்கள். உங்களுக்கு திமுக முக்கியம் என்றால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் சேருங்கள். கட்சியில் சேர்ந்த பேட்டி கொடுங்கள். அரசு அதிகாரிகளாக இருந்து கொண்டு தவறான புள்ளி விவரங்களை கொடுக்காதீர்கள். மக்களை குழப்பாதீர்கள். அதற்கு முழு பொறுப்பு நீங்கள்தான் என்று எச்சரிக்கிறேன்.

அந்தந்த துறைக்கு அதிகாரிகள் இருக்கும்போது, எதற்கு இந்த நான்கு அதிகாரிகள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். திமுக செல்வாக்கு இழந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது என்றும், ஊழல் மலிந்துவிட்டது என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். அதிமுக ஆட்சிக்கு வந்ததும், இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

எடப்பாடியின் நேரடி எச்சரிக்கை, அதிகாரிகள் மற்றும்  திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.