‘வேட்டுவம்’ படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பான பதைபதைக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘வேட்டுவம்’ ஆர்யா, அட்டகத்தி தினேஷ், கலையரசன் உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்திற்காக கார் ஸ்டண்ட் படைப்பிப்பு நேற்று நடைபெற்றது.
இதில் மூத்த ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் (வயது 52) ஓட்டிவந்த கார் வானத்தில் பறந்து இரண்டு முறை சுழன்று கீழே விழுந்தது.
திட்டமிட்டு கட்டுப்பாட்டுடன் எடுக்கப்பட்ட இந்த ஸ்டண்ட் முடிந்த பின்னும் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜ் காரில் இருந்து வெளியே வராததை அடுத்து படக்குழுவினர் காரை நோக்கி பதைதைக்க ஓடினர்.
இடிபாடுகளை இடையே சிக்கியிருந்த மோகன் ராஜை அவர்கள் மீட்ட போதும் காரை ஓட்டிவந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக திரையுலகினர் அதிர்ச்சியும் வேதனையும் வெளிப்படுத்தியுள்ள நிலையில் இதுதொடர்பான வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.