சென்னை: சென்னையில் உள்ள புழல் பெண்கள் சிறையில், தலைமை காவலர் சரஸ்வதியை நைஜீரிய கைதி ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கத்தியால் குத்தப்பட்ட தலைமை காவலர் சரஸ்வதி, இது சிறை காவலர்களுக்கு இருண்ட காலம் என்று விமர்சித்து உள்ளதுடன், கூடுதல் டி.ஜி.பி.யை கடுமையாக சாடியுள்ளார்.

புழல் சிறையில் பெண் காவலர் மீது வெளிநாட்டு (நைஜிரியா) நாட்டு பெண் கைதியா மோனிகா தாக்குதல் நடத்தி உள்ளார். இதனால் சரஸ்வதியின் முகம் உள்பட பல இடங்களில் கத்தி குத்து உள்பட படுகாயம் ஏற்பட்டது. இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறைத்துறை விஷயங்களில் கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் முறையாக நடவடிக்கை எடுப்பது இல்லை என்று பெண் சிறை காவலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். அதனால்தான், இன்று ஒரு கைதி, சிறையி தலைமை பெண் காவலரை தாக்கும் அளவுக்கு வந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமைக்காவலர் சரஸ்வதி, சிறையில் வெளிநாட்டுக் கைதிகள் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் அட்டூழியம் செய்து வருகின்றனர். அவர்களை கண்டித்தால், அவர்கள் எங்கள்மீதே தாக்கும் அளவுக்கு வந்துள்ளர். இதற்கு காரணம், கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் தான் காரணம்’ என்று குற்றம் சாட்டியதுடன், இது சிறை காவலர்களின் இருண்ட காலம் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
புழல் சிறையில் வெளிநாட்டு சிறை வாசிகளால் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை. காவலர்கள் தான் சிறைவாசி போல வாழும் நிலை உள்ளது. இதற்கு சிறைத்துறை தலைவர்தான் காரணம். தமிழ்நாட்டு கைதிகள் ஏதாவது குறைய சொல்ல முயன்றால் விரட்டி விடுகிறார். ஆனால், வெளிநாட்டு கைதிகள் செல்போன் வைத்திருக்க அனுமதி வழங்கப்படுவதுடன், அவங்களுக்கான தண்டனை வேண்டாம் என்று அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார்எ சிறைத்துறை தலைவர் மீது குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது.
வெளிநாட்டு கைதிகள், மொபைல் போன் வைத்திருந்தாலோ, அவர்கள் மற்ற கைதிகளை அடித்து பிரச்னை செய்தாலோ, அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், அவர்கள் மீது எவ்வித குற்றச்சாட்டு இருந்தாலும், தண்டனை தராமல் அவர்களிடம் சிரித்து பேசி மகிழ்கிறார். அவர்களை பார்ப்பதற்காகவே சிறைக்கு வருகிறார். அவர்களுக்கு ஏராளமான சலுகைகளையும், கூடுதல் டி.ஜி.பி., வழங்கி உள்ளார்.

வெளிநாட்டு கைதிகளுக்கு வெளிநாட்டு உணவு வழங்கப்படுது. சிறைக்குள் கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர். இரவு நேரங்களில் வெளிநாட்டு கைதிகள் அனைவரும் நிர்வாணமாக தூங்குகின்றனர். இவங்களை பார்த்து தமிழ்நாட்டு கைதிகளும் நிர்வாணமா தூங்குவது, சுற்றித்திரிவதுமாக உள்ளனர்.
மேலும், இவர்கள் லெஸ்பியன் உறவும் வைத்துக் கொள்கின்றனர். மற்ற கைதிகளும் ஆபாசமான முறையில் நடந்து கொள்கின்றனர். அவர்களை கண்டித்தால், என்னை ஏன் கேக்குற அவங்களை கேட்டியா? என்று எதிர்த்து பேசுகின்றனர். இதற்கு எல்லாம் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த மோனிகா என்ற கைதி தான் காரணம்.
இதுகுறித்து அவரை கண்டித்ததற்கு, கூடுதலாக இரண்டு வாய்தா அட்டன் பண்ண வேண்டி இருக்கும் அவ்வளவுதானே என்று சாதாரணமாக கூறுகிறார். தற்போது வரை, கைதி மோனிகா 4 காவலர்களை தாக்கி உள்ளார். இதில், ஒரு பெண் காவலர் அவள் மீது புகார் கொடுத்தார். அதில், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அந்த பெண் காவலர் வேலையை வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டு சென்று விட்டார்.
என்னை ஒரு முறை அறையில் வைத்து மோனிகா பூட்டி விட்டார். பின்னர், விஜயசாந்தி என்ற காவலர் தான் அறையை திறந்து என்னை மீட்டார். எனவே, வெளிநாட்டு கைதிகளை தனியா வச்சு பராமரிக்க வேண்டும். வெளிநாட்டு கைதிகளால் மற்ற கைதிகளும் அத்துமீறி செயல்படுகின்றனர். இவர்களுக்கு சிறைத்துறை தலைவர் மகேஸ்வர் தயால் ஆதரவு தெரிவிப்பதை நிறுத்த வேண்டும். புழல் சிறைக்குள் வெளிநாட்டு கைதிகளுக்கு மட்டும் பியூட்டி பார்லர் உள்ளது.
இதுகுறித்து வெளிநாட்டு கைதிகளிடம் கேட்டால் ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தையால் திட்டுகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளிநாட்டு கைதி மோனிகாவின் பெண் நண்பர் ஒருவர் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு சிறைத்துறை தலைவர் பரிசு கொடுத்து அனுப்பி வைக்கிறார். புழல் சிறையில் அனைத்து பகுதிகளிலும் கேமராக்கள் இருக்கும் நிலையில் மோனிகா தங்கி இருக்கும் பகுதியில் மட்டும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாமல் உள்ளது. மேலும் மோனிகாவுக்கு தேவையான அனைத்து வசதிகளும் எளிதில் கிடைக்கிறது.
சிறைத்துறை தலைவர் மகேஸ்வர் தயாள் அவளுக்கு பல்வேறு ஆதரவுகளை வழங்கி வருகிறார். இதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதனால், காவலர்களை கைதிகள் மதிப்பதில்லை என்று தெரிவித்தார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதிகளால், சிறை காவலர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். இதை யாரிடம் தெரிவித்தால், எங்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்று தெரியவில்லை. நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். இதற்கு, ஆனால், எந்த குற்றமும் செய்யாமல், நாங்கள் தான் கைதிகள் போல அடைக்கப்பட்டு உள்ளோம். நேற்று முன்தினம் புழல் பெண்கள் சிறையில், கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார். அப்போது தேவையில்லாமல், கைதி அறையில் இருந்து வெளியே வர முயன்ற, போதைப்பொருள் வழக்கில் தண்டனை பெற்ற, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மோனிகாவை, நான் தடுத்தேன். இதனால், என் மீது அவர் கொலைவெறி தாக்குதல் நடத்தினார். ர
த்த வெள்ளத்தில் கிடந்த என்னை, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில், ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், உதவிக்கு ஒரு காவலரை கூட அனுப்பி வைக்கவில்லை. எங்கள் கூடுதல் டி.ஜி.பி., சிறை காவலர்கள் நலனை கருத்தில் கொள்வதே இல்லை. நான் சிறைத் துறையில், 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். இது எங்களின் இருண்ட காலம். இதற்கு கூடுதல் டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறை தலைமை காவலர் சரஸ்வதி தாக்கப்பட்டது குறித்து, புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் காவல்துறையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.