திண்டுக்கல்: பராமரிப்பு பணி  காரணமாக பழனி முருகன் கோவிலுக்கு செல்லும்  மலை ரோப் கார் சேவைக்கு 31 நாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஜூலை 15ந்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்து உள்ளது.

பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணிக்காக வரும் 15ம் தேதி முதல் 31 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் விஞ்ச் சேவை மற்றும் படிப்பாதை வழியே மலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடு பழனி முருகன் கோயில் ஆகும். இது தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் உள்ள உள்ள முருகன் ஆண்டியாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இவரை தரிசிக்க நாடு முழுவதும் தினசரி பல ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.

இங்கு மலைமீது அமர்ந்துள்ள பழனி தண்டாயுதபாணியை தரிசிக்க பலர் படிக்கள் மூலம் செல்லும் நிலையில், வயதானவர்கள்,  சிறுவர்கள் மலைமீது செல்ல விஞ்ச் எனப்படும் இழுவை ரயில், மற்றும் ரோப் கார் சேவைகளும் அளிக்கப்படுகின்றன. இந்த நிலையில், ரோப்கார் சேவை பராமரிப்பு பணிகள் செய்யப்படுவதால் ஒரு மாதம்  இயங்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, பழனி முருகன் கோயிலில் வரும் 15ந்தேதி முதல் 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  இந்த ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்படும்.

இந்த நிலையில் பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 15ஆம் தேதி முதல் 31 நாள்களுக்கு பழனி முருகன் கோயிலில் ரோப் கார் இயங்காது என்றும் குறிப்பிட்ட நாள்களில் யானை பாதை, படிப்பாதை உள்ளிட்டவற்றை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.