சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்ட கல்லூரிகளில் சட்ட பிடிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை 25ந்தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர இன்று (மே 12) முதல் விண்ணப்பம் தொடங்கி உள்ளது.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 15 அரசு, 9 தனியார் சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 5 ஆண்டுகால சட்டப் படிப்புகளில் 3,024 இடங்கள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அதற்கான விண்ணப்பம் ஜுலை 25ந்தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப்படும் மூன்றாண்டு எல்.எல்.பி/ மூன்றாண்டு எல்.எல்.பி (ஹானர்ஸ்) சட்டப்படிப்பிற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் tndalu.ac.in வாயிலாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 25.07.2025 மாலை 05.45 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்து உள்ளார்.