திருப்பதி

திருப்பதி தேவஸ்தான அதிகாரி கிறித்துவ தேவாலயத்தில் பிராத்தனை செய்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன் தினம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில்ம்

“ஒரு இந்து மத அமைப்பின் ஊழியராக டி.டி.டி-யின் நடத்தை விதிகளை அவர் பின்பற்றாதது, டி.டி.டி விதிமுறைகளின் மீறலாகும். அவர் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுள்ளார். இந்தச் சூழலில், டி.டி.டி விஜிலென்ஸ் துறை சமர்ப்பித்த அறிக்கை மற்றும் பிற ஆதாரங்களை ஆராய்ந்த பின்னர், விதிகளின்படி அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்”

என்று தெரிவித்துள்ளது.

அதிகாரி ராஜசேகர் பாபு செய்தியாளர்களிடம்,

”நான் எனது கடமையை நேர்மையுடன் செய்ததுள்ள்ந்ந் டி.டி.டி மரபுகளை எப்போதும் மதிக்கிறேன். ஒரு மூத்த டி.டி.டி ஊழியராக, யாராவது என்னை ஒரு கோயில் அல்லது தேவாலயத்திற்கு அழைத்தால், நான் அங்கே சென்றேன். நான் எந்த நம்பிக்கையை அல்லது மதத்தைப் பின்பற்றுகிறேன் என்பது முக்கியமல்ல. நான் எப்போதும் டி.டி.டி விதிகளுக்கு இணங்க எனது சிறந்ததைச் செய்தேன்”

என்று தெரிவ்த்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான என்.டி.ஏ அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, டி.டி.டி பல இந்துக்கள் அல்லாத ஊழியர்களை பல்வேறு பதவிகளில் இருந்து இடமாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த பிப்ரவரியில், டி.டி.டி வாரியம் இந்துக்கள் அல்லாத மத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 18 ஊழியர்களை இடமாற்றம் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.