சென்னை
இன்று சென்னையின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது/

தமிழக மின் வாரியம்,
”சென்னையில் இன்று (10.7.2025, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அம்பத்தூர்: கேலக்ஸி சாலை, பெரியார் தெரு, சிவபதம் தெரு.
திருமுல்லைவாயல்: அம்பேத்கர் நகர் பிரதான சாலை, ஆட்டந்தாங்கல், பாலமுருகன் நகர், பிள்ளையார் கோயில் தெரு, கண்ணன்கோயில், ஆட்டந்தாங்கல் பாலம், கே.கே.நகர், சிவந்தி ஆதித்தனார் நகர், பெருமாள்நகர், வி.பி.ஆர்.நகர், சக்திநகர்.
அடையாறு: பெசன்ட்நகர் 6 முதல் 15வது குறுக்குத் தெரு, 1வது, 2வது பிரதான சாலை, ஆர்பிஐ குடியிருப்பு, கக்கன் காலனி, 4வது, 16வது, 29வது குறுக்குத் தெரு, 2வது, 3வது, 7வது அவென்யூ, டைகர் வர்தாச்சாரியார் சாலை.
சோழிங்கநல்லூர்: ராஜேஷ் நகர், ஆதிபுரீஸ்வரர் தெரு, அஷ்டலட்சுமி நகர், கோவலன் நகர், வேளச்சேரி பிரதான சாலை, பெரியார் நகர், கவிமணி தெரு, ஓம்சக்தி நகர், வெங்கடேஸ்வரா நகர், தாமரை தெரு, சோமு நகர், தேவி கருவிழி நகர், யுனைடெட் காலனி, பெல் நகர் 4, 5 வது குறுக்கு தெரு, புஷ்பா நகர்.
தாம்பரம்: மாடம்பாக்கம் பிரதான சாலை, சுதர்சன்நகர், விஜிபி, சரவணாநகர், ஸ்ரீதேவிநகர், அரவிந்த்நகர், கருமாரி அம்மன் நகர், அம்பிகாநகர், காயத்திரி கார்டன், பார்வதிநகர், சிவசக்திநகர், சீனிவாசநகர், சுந்தர் அவென்யூ, ரூபி.”
என அறிவித்துள்ளது.