நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…
பேச வேண்டியதே இதைப்பத்தி தான்

திருப்புவனம் அஜித் குமார் கொல்லப்பட்ட வழக்கில், அடுத்த மாதம் 20-ஆம் தேதிக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது..
இந்த சம்பவத்தை இங்கே பேசப்பட வேண்டியது காவல் துறை சீர்திருத்தத்தைதான். அஜித் விவகாரத்திலேயே, “அவனை அடித்துக் கொ..ல்லுங்கள்” என்று எந்த அதிகாரியும் உத்தரவு பிறப்பித்திருக்க மாட்டார். ஆனால் சித்ரவதை மேல் சித்ரவதை செய்து அடித்துக் கொ..ல்கிற அளவுக்கு போலீசாருக்கு வன்ம புத்தி எப்படி உருவானது என்பது தான் கேள்வி.
அஜித்துக்கும் அந்த போலீசருக்கும் முன்விரோதப் பகையா என்ன?
இது போலத்தான் புகாரின் பேரில் விசாரணை செய்யப்படுபவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே முன்விரோதம் எதுவும் இருப்பதில்லை. ஆனாலும் ஆனாலும் கொ.லை வெறி தாக்குதல் நடக்கிகிறது.
பொதுவெளியில் ஒருவரை பிடிக்கும்போது,” எதுவாக இருந்தாலும் ஸ்டேஷனில் வந்து சொல்லு” என்று வண்டியில் அள்ளிப் போட வேண்டியது. ஸ்டேஷனுக்குள் நுழைந்த வினாடியில் இருந்து வாயையே திறக்க விடாமல் ஆளாளுக்கு துவம்சம் செய்ய வேண்டியது..
இன்னமும் மார்பளவு, உயரம் உடல் பலம் போன்றவை மட்டுமே போலீசுக்கு தகுதி என்று பைத்தியக்காரத்தனமாக பின்பற்றிக் கொண்டிருந்தால் இப்படித்தான். அடியாட்களைத்தான் உருவாக்க முடியுமே தவிர, காவல் மற்றும் புலனாய்வு விஷயங்களில் ஒரு அறிவு சார்ந்த அமைப்பை உருவாக்கவே முடியாது.
ஆய்வாளர், துணை ஆய்வாளர், மற்றும் காவலர்கள் என ரேங்க்கிற்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் என்ன மாதிரியான மன நிலை இருக்கிறது என்பதை ஆராய்ந்து பாருங்கள். பெரும் அதிர்ச்சி தான் மிஞ்சும்.
ஆய்வாளருக்கும், துணை ஆய்வாளருக்கும் ஒரு நகரமே தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ளது போன்ற ஒரு மனநிலை. “இந்த நகரை காக்க வேண்டியது என் கடமை” என்கிற மனநிலை போய், “இந்த ஊருக்கே நான்தான்” என்கிற மனநிலை. ஒரு புகார் மட்டும் கிடைக்கட்டும் எவனை வேண்டுமானாலும் தூக்கிப்போட்டு மிதிக்கலாம், என்று மனநிலை.
காவலருக்கோ, “நான் போலீசு. எங்கிட்டயே கைநீட்டி பேசுறியா” என்பதில் ஆரம்பித்து அது போய்க்கொண்டே இருக்கும்.
என்றைக்கு இதையெல்லாம் கையில் எடுத்து போலீசாரின் மனநிலையை உளவியல் ரீதியாக மாற்றுகிறார்களோ அன்றைக்கு தான் விடிவுகாலம்.
ஆட்சியாளர்கள் கண்டிப்பாக செய்ய மாட்டார்கள்.
உச்ச நீதிமன்றம்தான் செய்ய வேண்டும்..
Patrikai.com official YouTube Channel