மதுரை
காவலர்கள் தாக்கியதால் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் தனக்கு மதுரை நகரிலேயே அரசுப்பணி வேண்டும் எனக் கூறியுள்ளார்.

நேற்று காவல்துறையால் தாக்கப்பட்டஅஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கு விசாரணை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நடைபெற்றபோது “நவீன்குமாருக்கு வழங்கப்பட்ட ஆவின் பணி, அரசுப் பணியல்ல” என்று தெரிவிக்கப்பட்டதற்கு நீதிபதிகள், “ஆவின் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம்தான்” என்றனர்.
வழக்கு விசாரணைக்கு வந்திருந்த அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், செய்தியாளர்களிடம்.
”நகை திருட்டு புகார் தொடர்பாக எனது சகோதரர் அஜித்குமாரை மட்டுமின்றி, என்னையும் போலீஸார் கடுமையாக தாக்கினர். போலீஸாரின் தாக்குதலால் அஜித்குமார் உயிரிழந்த நிலையில், எனக்கும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
தமிழக அரசால் தற்போது எனக்கு காரைக்குடி ஆவினில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அரசு வேலை இல்லை. மேலும், ஆவின் அலுவலகம் 80 கி.மீ. தொலைவில் உள்ளது. எனவே, மதுரையிலேயே அரசுத் துறையில் பணி வழங்க வேண்டும்.
வளர்ச்சியடையாத பகுதியில் எங்களுக்கு வீட்டு மனை பட்டாவழங்கப்பட்டுள்ளது. அதிலும் எங்களுக்கு திருப்தி இல்லை. அஜித்குமார் உயிரிழப்பில் சம்பந்தப்பட்ட காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும் தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும்.”
என்று கூறியுள்ளார்.