கோவை:  ‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’ என பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை,  கோவையில்  நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, அங்கு வந்த பொதுமக்களுடன்  சந்தித்து உரையாடினார்.

2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைபற்றும் நோக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், தொகுதி வாரியாக ‘மக்களை காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கி உள்ளனர். நேற்று (ஜுன் 7)ந்தேதி கோவை  மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.  கோவையில் மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், சரவணம்பட்டி பகுதிகளில் வாகனத்தில் நின்று பிரசாரம் மேற்கொண்டார்.  அப்போது, விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசினார்.

இந்த நிலையில், இன்று 2வது நாளாக கோவை மாவட்டத்தில் பிரசாரம் தொடங்கி உள்ளார். இதையடுத்து, இன்று காலை  கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்ட  எடப்பாடி பழனிசாமி,  அங்கிருந்த பொதுமக்களை சந்தித்து பேசினார். அவர்களின் கோரிகைக்களை கேட்டறிந்தார்.

இதையடுத்து,   இன்று கோவை வடக்கு மற்றும் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரப் பயணம் மேற்கொள்கிறார். மாலை 4 மணி அளவில் பி.என்.புதூர், வடகோவை உள்ளிட்ட பகுதிகளில்  பரப்புரை செய்ய உள்ளார்.