சென்னை
தமிழக அமைச்சர் கே என் நேரு நடிகர் விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசி உள்ளார்.

நேற்று அரியலூரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அமைச்சர் கே என் நேரு,
“திமுக கூட்டணியில் எந்தவித சஞ்சலமும், சலசலப்பும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். ஆனால் எதிரணியினர் அப்படி அல்ல. பா.ஜ.க. கூட்டணியில் இணைந்த வுடன், அ.தி.மு.க. தொண்டர்கள் மனம் சோர்ந்து விட்டனர். ஆட்சி அமைந்தால், அந்த அமைச்சரவையில் பா.ஜ.க.வும் பங்கு பெறும் என்று கூறி வருகின்றனர்.
ஆகையால் அவர் களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லாத நிலை உள்ளது. பா.ம.க.வினருக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக நமக்கு ஒரு சாதகமான சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்த அரியலூர், பெரம்பலூரில் அது நமக்கு ஒரு கூடுதல் பலம்.
பா.ஜ.க.வினர் தாங்கள் தேர்தலில் வெல்லவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் தி.மு.க. வெல்லக் கூடாது என நினைக்கின்றனர். அதனால் தான் நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகின்றனர். நாளையே முதல்வர் ஆகுவது போல் நான் உங்களோடு வரவில்லை, அவர்களோடு செல்ல வில்லை என கூறிக் கொண்டுள்ளார்.
அதற்கெல்லாம் நாம் கவலைப்பட தேவை யில்லை. இளைஞரணி யினர் சிறப்பாக செயல் பட்டு வருகின்றனர். எனவே அனைவரும் சிறப்பாக செயல்பட்டு தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலினை முதல்வராக்குவது நமது கடமை.”
என உரையாற்றியுள்ளார்.