சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் ஏற்கனவே ஜுன் 13ந்தேதி இந்த ஆலோசனை நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், இன்றும் தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், திமுக தலைவர் , கட்சி நிர்வாகிகளுடன் அவ்வப்போது கலந்துரையாடி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். இதற்காக உடன்பிறப்பே வா என்கிற தலைப்பில் நேருக்கு நேர் சந்திப்பு நிகழ்ச்சியை அவர் நடத்தி வருகிறார்.
கடந்த 13-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி அவ்வப்போது சிறிய இடைவெளி விட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதல் நாள் அன்று சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து இதுவரை 18 தொகுதி நிர்வாகிகளை நேரில் அழைத்துப் பேசி அவர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய ஆலோசனையை மேற்கொண்டு உள்ளார்.
இந்த நிலையில் இன்று பட்டுக்கோட்டை, மணப்பாறை, பாபநாசம் தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.