டோக்கியோ: டோக்கியோவுக்கு சென்ற போயிங் 737 விமானம் நடுவானில் திடீரென 26,000 அடி உயரத்தில் இறங்கியதால் விமான பயணிகள் பீதி அடைந்தனர். இதனால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், விமான பயணிகள் கண்ணீர் மல்க தங்களது அனுபவத்தை பகிர்ந்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 12ந்தேதி குஜராத் மாநிலத்தில் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் ஒருசில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்த 242 பேரில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர். இது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து போயிங் விமானங்கள் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு வந்தன.
இந்த சம்பவம் ஜூன் 30 திங்கட்கிழமை மாலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஷாங்காய் புடாங் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு டோக்கியோவில் உள்ள நரிட்டா சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த JL8696 (ஜப்பான் ஏர்லைன்ஸின் குறைந்த விலைப் பிரிவான ஸ்பிரிங் ஜப்பானால் இயக்கப்படுகிறது) விமானத்தில் நிகழ்ந்தது. இது போயிங் 737 விமானம் என்றும் இதில், பணியாளர்கள் உட்பட 191 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த விமானத்தில் திடீரென கேபின் அழுத்தம் குறைந்ததால், விமானம் பத்து நிமிடங்களில் 36,000 அடியிலிருந்து 10,500 அடிக்குக் கீழே வேகமாகக் கீழே இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது விமான பயணிகள் அணிந்திருந்த ஆக்ஸிஜன் முகமூடிகள் தானாகவே கழன்று கீழே விழுந்தன. இதனால், விமான பணியாளர்கள், பயணிகள் உடனடியாக அவற்றைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி மாலை 6:53 மணியளவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, கேபினுக்குள் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளில், அதிர்ச்சியடைந்த பயணிகள் ஆக்ஸிஜன் முகமூடிகளை அணிந்திருப்பதையும், சிலர் கைகளைப் பிடித்துக் கொண்டிருப்பதையும், மற்றவர்கள் அமைதியாக இருக்க முயற்சிப்பதையும் காணலாம். ஒரு விமானப் பணிப்பெண் அனைவரையும் நிதானமாகவும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும் வலியுறுத்துவதைக் கேட்கலாம்.
விமானம் தரையிறங்கியதும், தங்களது பயண அனுபவத்தை பலர் கண்ணீர் மல்க தெரிவித்தனர். தாங்கள் கடவுள் அருளாள் பிழைத்ததாக சிலர் கூறினார். ஒருவர் கூறும்போது, “நான் ஒரு மௌனமான சத்தத்தைக் கேட்டேன், அடுத்ததாக எனக்குத் தெரிந்தது, ஆக்ஸிஜன் முகமூடிகள் மேலே இருந்து விழுந்தன. அப்போது, ஒரு விமானப் பணிப்பெண் அழுதுகொண்டே, ஒரு செயலிழப்பு இருப்பதாகவும் , அனைவரும் முகமூடிகளை அணியுமாறு கத்தினார், என தெரிவித்துள்ளார்.
விமானம் தரையிறங்கும்போது, விமானத்தினுள் இரந்த முகமூடிகள் விழுந்தபோது நாங்கள் பெரும் அதிர்ச்சியடைந்ததாகவும் கண்ணீர் மல்க மற்றொரு பயணி தெரிவித்துள்ளார்.
விமானம் விபத்துக்குள்ளாகும் நமக்கு இதுதான கடைசி நாள் எனஎன பயந்துகொண்டே ஒரு விமானபயணி, மிகவும் வேதனையான தருணத்தில், நிலைமை மோசமானதை அஞ்சி. இனிமேல் இருப்போமோ என்ற சந்தேகத்தில் தனது இறுதி விருப்பத்தை எழுதியதாகக் கூறினார்,
விசாரணையில், விமானம் திடீரென தரையிறங்கியதால், விமானி அவசரநிலையை அறிவித்து, விமானத்தை ஒசாகாவில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பிவிட்டார், அங்கு உள்ளூர் நேரப்படி இரவு 8:50 மணியளவில் அது பாதுகாப்பாக தரையிறங்கியது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
பயணிகளுக்கு இரவு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து இழப்பீடாக தலா 15,000 யென் (தோராயமாக ₹8,945) வழங்கப்பட்டது. கேபின் அழுத்தம் திடீரெனக் குறைந்ததற்குக் காரணமான இயந்திரக் கோளாறு குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆனால், ஜப்பான் ஏர்லைன்ஸ் இன்னும் இதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.