மதுரை:  திருபுவனம் கோவில் காலாளி அஜித்  காவல்துறையினரால் அடித்துகொல்லப்பட்ட நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்து வரும் உயர்நீதி மன்றம் மதுரை கிளை நீதிபதிகள், இந்த கொலை வழக்கில்  யாரை காப்பாற்ற முயற்சி நடைபெறுகிறது? தமிழக அரசுக்கு  சரமாரி கேள்வி எழுப்பி உள்ளனர்.

அடிப்பதற்கு போலீஸ் எதற்கு – கிராம மக்களிடம் கொடுத்தாலே அடித்து உண்மை வாங்கி விடுவார்கள். மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான பொதுநலன் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் காட்டமாக ‘கேள்வி எழுப்பி உள்ளனர்

கடந்த அதிமுக ஆட்சியில், சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகிய தந்தை மகன் காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது  சிவகங்கை திரும்புவனம் பகுதியில்  விசாரணைக்கு அழைத்து சென்ற நபரை  காவல்துறை கடுமையாக கொடூமைபடுத்தி கொலை செய்துள்ளது. இந்த லாக்கப் மரண  மரண வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த கொடூர சம்பவம் அரங்கேறியது தொடர்பான வீடியோவும்  சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் மரணமடைந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையை திருப்புவனம் மாஜிஸ்திரேட் இன்று மாலை 3 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும். பிரேத பரிசோதனை அறிக்கையை மதுரை அரசு மருத்துவமனை டீன் இன்று மாலை 3 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கிடையே அஜித்குமாரை போலீசார் தாக்கும் வீடியோ நீதிபதிகளிடம் காண்பிக்கப்பட்டது. இந்த வீடியோ எடுத்த சக்தீஸ்வரன் இன்று மதியம் 3 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், அஜித் கொலை வழக்கை விசாரித்து வரும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை,  விசாரணைக்கு அழைத்து சென்றவரை,  அடிப்பதற்கு போலீஸ் எதற்கு? கிராம மக்களிடம் கொடுத்தாலே அடித்து உண்மை வாங்கி விடுவார்கள் என்று கூறியதுடன் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது.

 அஜித்குமாரை ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கவில்லை?

நகை காணாமல்போன வழக்கு யாருடைய உத்தரவின்பேரில் தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது?.

உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டுமென முழுமையான விவரங்களை மறைக்கக் கூடாது.

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் முறையாக வேலை செய்கின்றனவா?

சிசிடிவியில் பதிவு செய்யக்கூடாது என வெளி இடத்தில் வைத்து அடித்து உள்ளனர்  என்று தெரிவித்துதன்,

நகை காணாமல் போன வழக்கில் போலீசார் ஏன் FIR பதியவில்லை?

யாருடைய உத்தரவின் பேரில் விசாரணை சிறப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டது?

சிறப்பு படையினர் தாங்களாகவே வழக்கை கையில் எடுத்து விசாரிக்கலாமா?

எஸ்பி ஆஷிஸ் ராவத்தை அவசர அவசரமாக தமிழ்நாடு அரசு  காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது ஏன்?

உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும் என உண்மையை மறைக்க கூடாது.

சமூக வலைதளங்களில் வந்த தகவலை பார்த்து 2 மணி நேரத்தில் தனிப்படை விசாரணையை துவங்கியதா?

போலீசார் மாமூல் வாங்கும் ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உள்ளன, 2 மணி நேரங்களில் விசாரிப்பீர்களா?

அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? புலனாய்வு செய்வதற்கே காவல்துறை.

இந்த கொலை வழக்கில், முழு உண்மையையும் சொல்ல தமிழக அரசு மறுக்கிறது.

சி.சி.டி.வி காட்சிகளில் இருந்து மறைக்க வெளியிடங்களுக்கு கொண்டு சென்று இளைஞர் அஜித்தை அடித்து துன்புறுத்தியதா போலீஸ்?

2 நாட்களாக வேறு வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விசாரிக்கும் அதிகாரத்தை சிறப்பு படைக்கு கொடுத்தது யார்?

காவல்துறை, நீதித்துறையை சேர்ந்தவரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை அடித்துக் கொலை செய்தாலும் போலீசார் இப்படி தான் நடந்து கொள்வார்களா?

உயர் அதிகாரிகளின் சட்டவிரோத கட்டளைகளுக்கு போலீசார் கீழ்படிய வேண்டிய அவசியமில்லை  என தெரிவித்த நீதிபதிகள்.

இந்த வழக்கில் ஏன்  காவல்துறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

ஒட்டுமொத்த காவல்துறையை நாங்கள் குறை சொல்லவில்லை. ஆனால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரேத பரிசோதனை அறிக்கையை அளிக்காதது ஏன்? * பிரேத பரிசோதனை அறிக்கையை நடுவண் நீதிமன்ற நீதிபதிக்கு ஏன் இன்னும் அளிக்கவில்லை? *

யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டிஜிபி பதிலளிக்க வேண்டும்.

சிவகங்கை மாவட்ட எஸ்பியை ஏன் இடமாற்றம் செய்தீர்கள்?, சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து,  அஜித்குமாரை, சிறப்பு புலனாய்வு குழுவினர் அடித்து விசாரிக்கும் வீடியோவை எடுத்த நபர் இன்று பிற்பகல் 3 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை பிற்பகல் விசாரணைக்கு ஒத்தி வைத்தனர்.

போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட அஜித்குமாரின் உடலில் 30 காயங்கள்! உடற்கூறாய்வு அறிக்கை – பதபதைக்கும் வீடியோ

அஜித்குமார் உயிரிழப்பு – வலிப்பு என எஃப்ஐஆரில் பதிவு? சிபிஐ விசாரணைக்கு மாற்ற எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி, விஜய் வலியுறுத்தல்…