தேசிய ஜூனியர் (U20) கூட்டமைப்பு தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் ஜூன் 22 முதல் 24 வரை நடைபெற்றது.

3 நாட்கள் நடைபெற்ற இந்த தடகள போட்டிகளில் 278 பெண்கள் உட்பட மொத்தம் 959 தடகள வீரர்கள் பங்கேற்றனர்.

 

மதன் மோகன் மாளவியா விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இந்த போட்டிகளின் பெரும்பாலான பிரிவுகளில் உ.பி., ம.பி., மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவ மாணவிகளே அதிகம் பங்கேற்றனர்.

ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த மாணவி சாதனா ரவி 12.75 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார்.

 

நீளம் தாண்டுதலில் 5.82 மீட்டர் தாண்டி 4வது இடத்தைப் பிடித்த போதும் ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தவிர, ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கோகுல் பாண்டியன் தங்கம் வென்றார்.

எஸ்.ஆர்.எம். கல்லூரி (SRMIST) மாணவர்களான இவர்கள் இருவரும் U20 தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.