சென்னை: தரமற்றது மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் குணமுள்ள ‘பாராசிட்டமல்-650’  உள்பட 15 வகையான மருந்து, மாத்திரை கர்நாடக மாநில அரசு தடை செய்து அதிரடி உத்தரவிட்டு உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும், பொதுமக்கள் இந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டதுடன், தரமற்றதாக உள்ள மருந்து-மாத்திரைகளை ஆஸ்பத்திரிகள், கிடங்குகள், மருந்து கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என்றும் மாநில  அரசின் சுகாதாரத்துறை  எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடகாவில் பாராசிட்டமால் உள்பட 15 மாத்திரை, மருந்துகளுக்கு தடை விதித்து அந்த மாநில அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த மாத்திரை, மருந்துகளை ஆய்வகத்தில் பரிசோதித்தபோது கிடைத்த முடிவில் உடல்நலத்துக்கு தீங்கு ஏற்படுத்துவது உறுதியான நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான சோதனையில், பாரசிட்டமால் உள்பட பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும்,  சில மாத்திரை, மருந்துகளின் தரம் குறைவாக இருந்தது தெரிய வந்தது. மேலும், . இந்த மாத்திரை, மருந்துகளை மக்கள் பயன்படுத்தும்போது அது உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து மாத்திரை, மருந்துகள் என்று 15 தயாரிப்புகளுக்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு கர்நாடகா மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மைசூருவில் உள்ள அபான் பார்மாசூட்டிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்த பாராசிட்டமால் மாத்திரையான போமோல்-650 (Pomol – 650),

மைசூருவை தளமாகக் கொண்ட என் ரங்கா ராவ் & சன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்த ஓ சாந்தி கோல்ட் கிளாஸ் கும்கம்  தயாரிப்புகளும் தடை செய்யப்பட்டு உள்ளன.

ல்ட்ரா லேபரேட்டரீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் டாம் பிரான் பார்மாசூட்டிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்த காம்பவுண்ட் சோடியம் லாக்டேட் இன்ஜெக்சன் ஐபி, பயோன் தெரபியூட்டிக்ஸின் மிட்டு க்யூ7 சிரப் (Mitu Q7 Syrup), ஸ்வெஃப்ன் பார்மாசூட்டிகல்ஸின் பான்டோகாட்-டிஎஸ்ஆர் காப்ஸ்யூல்கள், புனிஸ்கா இன்ஜெக்டபிள்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் சோடியம் குளோரைடு இன்ஜெக்சன் ஐபி 0.9% w/v உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளது.

சேஃப் பேரன்டெரல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கோழி தடுப்பூசிகளுக்கான ஸ்டெரைல் டைலூயன்ட்கள் போன்ற கால்நடை பொருட்கள் மற்றும் கிளிமிஸ்-2 (கிளிமிபிரைடு மாத்திரைகள்), அயர்ன் சுக்ரோஸ் இன்ஜெக்சன் (இரோகெய்ன்) மற்றும் பைராசிட்-ஓ சஸ்பென்ஷன் போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளது.

 மாத்திரை, மருந்துகள், சிரப்புகள், கால்நடை தடுப்பூசிகள் என்று மொத்தம் 15 தயாரிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த பொருட்களை மருந்தகங்களில் விற்பனை செய்யவும், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கவும் கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட மருந்துகள் விவரம்:

அல்ட்ரா லேபரேட்டரீஸ் நிறுவனத்தின் ரிங்கர்க லேக்டேட் சொல்யூசன் ஊசி, டாம் பிரான் நிறுவனத்தின் ரிங்கா்க லேக்டேட் சொல்யூசன் ஊசி, அபான் பார்மாசிட்டிகல்ஸ் நிறுவனத்தின் போலோல் பாராசிட்டமல் 650 மாத்திரை. பயோன் தெராப்கோட்டிக்ஸ் இன்டியா நிறுவனத்தின் மிடு கியூ-7 சிரப்பு, சேப் பேரன்டிரல்ஸ் நிறுவனத்தின் வெடர்னரி மல்டி டோஸ் விலா 200 எம்.எல்., இந்தோராம ஹெல்த்கேர் நிறுவனத்தின் ஸ்டான் பிளாக்ஸ் ஓட் மாத்திரை, ஸ்டெப்னா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் பேன்டோபிராசல் மாத்திரை, புனிப்யா இஞ்ஜக்டபுள் நிறுவனத்தின் சோடியம் குளோரைடு ஊசி, அதே நிறுவனத்தின் இன்னொரு சோடியம் குளோரைடு ஊசி, ஈஸ்ட் ஆப்பிரிக்கன் ஓவர்சிஸ் நிறுவனத்தின் விட்டமின் பி6, விட்டமின் டி3 மாத்திரைகள். என்.ரங்கராவ் நிறுவனத்தின் ஓ சாந்தி கோல்ட் கிளாஸ் குங்கும், ரெட்னிக்ஸ் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் பிராசிட்-ஓ சஸ்பென்ஷன், கே.என்.எம். பார்மா நிறுவனத்தின் கிளிமிபிரைட் மாத்திரைகள், ரிகைன் லேபரேட்டரீஸ் நிறுவனத்தின் ஐரன் சுக்ரோஸ் இன்ஜெக்சன், ஒட்சுகா பார்மாசூட்டிகல்ஸ் இன்டியா நிறுவனத்தின் ரிங்கர்க லேக்டேட் இன்ஜெக்ஷன் ஆகிய 15 வகை மருந்து-மாத்திரைகளுக்கு கர்நாடகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.