சென்னை:  ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை மற்றும் சூலூர் பேட்டை செல்லும் ரயில்கள் சனி, ஞாயிறுகளில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

இதுகுறித்து  தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிப்பில்,   சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி-கவரப்பேட்டை ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால்  28, 29 ஆகிய தேதிகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அதிகாலை 5.40, காலை 10.15, மதியம் 12.10, 12.35, 1,15, 3.10 நேரங்களில் சென்ட்ரல்-சூலூர்பேட்டை, சூலூர்பேட்டை-சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

காலை 10.30, 11.35 மதியம் 1.40 மற்றும் மதியம் 1, 2.30, 3.15, 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் மதியம் 12.40, 2.40 மற்றும் மாலை 4.30 மணிக்கு கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மேலும் ஆவடியில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.