1975 ஆம் ஆண்டு வெளியான ‘ஷோலே’ திரைப்படத்தின் ‘அன்-கட் வெர்ஷன்’ முதல்முறையாக இத்தாலி திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
ஷோலே படத்தின் வெட்டப்படாத பதிப்பை மீட்டெடுத்திருப்பதுடன் அதன் ‘ஒரிஜினல் கிளைமாக்ஸ்’ மற்றும் சில நீக்கப்பட்ட காட்சிகளையும் இணைத்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக திரையிடப்படுகிறது.
இந்திய திரையுலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாக ‘ஷோலே’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

இந்தப் படம் வெளியான போது பாலிவுட்டை தாண்டி இந்திய அளவில் மட்டுமன்றி உலக அரங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
ரமேஷ் சிப்பி இயக்கிய இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா, ஹேமா மாலினி, ஜெயா பாதுரி மற்றும் அம்ஜத் கான் ஆகியோர் நடித்திருந்தனர்.
சிப்பி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைத்து திரைப்பட பாரம்பரிய அறக்கட்டளை கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப் படத்தை முழுமையாக மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது.
இதன் விளைவாக திரையரங்கில் இதற்கு முன் திரையிடப்பட்ட பதிப்பில் இடம்பெறாத நீக்கப்பட்ட காட்சிகள் மட்டுமன்றி அந்தப் படத்தின் அசல் கிளைமாக்ஸ் உடன் முதல் முறையாக பார்வையாளர்களுக்கு திரையிடப்படுகிறது.
இத்தாலியின் போலோக்னாவில் உள்ள இல் சினிமா ரிட்ரோவாடோ விழாவில் ஜூன் 27ம் தேதி ‘ஷோலே’ திரைப்படத்தின் இந்த ‘அன்-கட் வெர்ஷன்’ திரையிடப்பட உள்ளது.