டெஹ்ரான்: இந்தியர்கள் மற்றும் அங்கு படித்து வரும்  மாணவர்கள் உள்பட சுமார்  1000 பேர் வெளியேறுவதற்காக ‘ஈரான் அரசு  வான்வெளியை திறந்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஈரான், இஸ்ரேல் நாடுகளின் போர் மேலும் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த மோதலால் ஈரானில் உள்ள பல நகரங்களில் உள்ள இந்திய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஈரானில் உள்ள தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அங்குள்ள இந்திய மாணவர்களை வெளியேற்ற மத்திய அரசு மற்றும் அங்குள்ள தூதரகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதற்காக ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் நடவடிக்கை துவங்கி உள்ளது. அதன்படி ஏற்கனவே 110 மாணவர்கள் ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்ட நிலையில், மீதமுள்ள சுமார் 1000 பேர் வெளியேறும் வகையில்,   வான்வெளியை ஈரான் அரசு திறந்து விட்டுள்ளது.

ஈரான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான மகான் ஏர்வேஸ் 3 விமானங்கள் மூலம் இந்திய மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தாத நகரமான மஸ்சாத் வழியாக பாதுகாப்பாக அழைத்து வர ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

ஆபரேசன் சிந்து மூலம், தனி விமானங்கள் மூலம் அவர்களை அழைத்து வர இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது முதல் விமானத்தின் மூலம் மாணவர்களில் ஒரு பகுதியினர் தலைநகர் டில்லி அழைத்து வரப்படுவார்கள். எஞ்சியவர்களும் பகுதி, பகுதியாக அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

இஸ்ரேல் மீதான போர் எதிரொலியாக ஈரான் தமது வான்வெளியை மூடி இருந்தது. தற்போது இந்தியாவின் கோரிக்கையை ஏற்று வான்வெளியை திறந்துள்ளது.

இஸ்ரேலின் “ஆக்கிரமிப்பை” கண்டிப்பதில் இந்தியா உலகத்துடன் இணைய வேண்டும் என்று இடைக்கால தூதர் கூறுகிறார், அவ்வாறு செய்யத் தவறினால் மற்றவர்கள் தங்கள் அண்டை நாடுகளைத் தாக்க “ஊக்குவிப்பார்கள்” என்று எச்சரித்தார்.

ஈரானில் சுமார் 10,000 இந்தியர்கள் உள்ளனர், இதில் 1,500-2,000 மாணவர்கள் உள்ளனர். அவர்களை அழைத்து வரும் முயற்சி நடைபெற்று வருகிறது.