சென்னை:  சென்னை கிழக்கு கடற்கரையோரம் (ஈசிஆர்) பகுதிகளில்  கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி, கடலை பார்த்து கட்டப்பட்டுள்ள  22 கட்டிடங்கள் இடிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது.  இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை முட்டுக்காடு கடற்கரையில் உள்ள ஆடம்பரமான பங்களாக்கள் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. கடல் அரிப்பைத் தடுக்க, பங்களா உரிமையாளர்களால் சட்டவிரோத கடல் சுவர் கட்டப்பட்டுள்ளது. இவைகள் இடிக்கப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன.

கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறியதாக கூறப்பட்ட புகாரை விசாரித்து வரும்  தேசிய பசுமை தீர்ப்பாயம், அந்த கட்டிடங்களை இடிப்பது தொடர்பான இறுதிக்கட்ட ஆலோசனை நடத்தி வருகிறது.  அடுத்த விசாரணையின்போது அந்த கட்டிடங்கள் இடிக்க உத்தரவிடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. .  இதன் காரணமாக,  ECR இல் உள்ள 22 கடல் நோக்கிய கட்டிடங்கள் இடிக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றன

கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) முட்டுக்காட்டில் 22 கடற்கரை நோக்கிய குடியிருப்பு கட்டிடங்கள் இடிக்கப்படும் அபாயத்தை எதிர்கொள்கின்றன. இந்த கட்டிடங்கள்,  செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அவற்றை கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) விதிகளை மீறி இருப்பதை உறுதி செய்துள்ளது. 2005 ஆம் ஆண்டு இப்பகுதியின் புவிசார் வரைபடத்தின் அடிப்படையிலான சான்றுகள், பல கட்டுமானங்கள் உருவாகியுள்ளன என்பதையும், அவற்றில் பெரும்பாலானவை, முதன்மையான பார்வையில், அங்கீகரிக்கப்படாததாகவும், CRZ அறிவிப்பு, 2011 ஐ முற்றிலும் புறக்கணித்து மீறுவதாகவும் தெரிகிறது

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கட்டிடங்கள் – சில கட்டி முடிக்கப்பட்டவை, மற்றவை இன்னும் கட்டுமானத்தில் உள்ளன . இந்த கட்டிடங்கள் CRZ III இன் வளர்ச்சி தடை மண்டலத்தில் (NDZ) அமைந்துள்ளன,  அந்த பகுதிகளில்  உயர் அலைக் கோட்டிலிருந்து 200 மீட்டருக்குள் நிரந்தர கட்டமைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால், தடையை மீறி கட்டிடங்கள் எழுப்பபட்டு உள்ளது.

இதை தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

அதன்பேரில்,  இதுகுறித்து ஆய்வு செய்த செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், அந்த பகுதியில் உள்ள 22 கட்டிடங்கள் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறி இருப்பதை உறுதி செய்துள்ளன.  இவற்றில் குறைந்தது ஆறு கட்டிடங்கள் ஆய்வின் போது கூட கட்டுமானத்தில் இருப்பது கண்டறியப் பட்டது,  மற்றவை உயர்தர, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள், சில இரண்டு தளங்களைக் கொண்டவை.

இதுகுறித்து செங்கல்பட்டு கலெக்டர் எஸ். அருண்ராஜ் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை சமர்பித்தார். அதில்,  வருவாய் மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் அடங்கிய கலெக்டர் குழு, ஜிபிஎஸ் மூலம் ஆய்வுகளை மேற்கொண்டதாகவும், இதில் கண்டறியப்பட்ட  கட்டிடங்கள் மீது , நடவடிக்கை எடுக்கும்படி,  தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் (TNSCZMA) புகைப்படங்கள் மற்றும் உரிமை விவரங்களை சமர்ப்பித்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கை வியாழன் அன்று  விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், நிர்வாகத்தால் ஏற்கனவே மீறல்கள் ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், இதுவரை ஏன் இடிப்பு தொடங்கப்படவில்லை என்பது குறித்து தீர்ப்பாயத்தின் நிபுணர் உறுப்பினர் சத்யகோபால் கோர்லபதி  கேள்விகளை எழுப்பினார். மேலும்,

மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் (DCZMA) தலைவராக  இருக்கும்,  மாவட்ட கலெக்டர் இதுபோன்ற சட்டவிரோத வளர்ச்சிகளுக்கு எதிராக தீர்க்கமாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

இதற்கு கலெக்டர் சார்பில் அளிக்கப்பட்ட பதில், இதுதொடர்பான,  மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் (SCZMA) மீறுபவர்களின் பட்டியலை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பியதாக தெரிவித்தது.

இதையடுத்து கேள்வி எழுப்பிய தேசிய பசுமை தீர்ப்பாயம்,   வனம் மற்றும் காலநிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகமே, நேரடியாக இடிப்புகளை மேற்கொள்ள அதிகாரம் உள்ளதா என்பது குறித்து விளக்கம் கோரியது. மேலும், இது தொடர்பாக  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக   உத்தரவுகளுக்காக காத்திருக்காமல் இடிப்பு தொடர முடியுமா என்பது குறித்து முடிவு செய்யவும் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக,   வரும் வாரங்களில் நடைபெறும் விசாரணையின்போது பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணமாக, குறிப்பிட்ட விதிகளை மீறிய 22 கட்டிடங்கள்  விரைவில் இடிக்கப்படும் சூழல் எழுந்துள்ளது.