விசாகப்பட்டினம்: இன்று  உலக யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி,  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அவருடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்றனர். இது கின்னஸ் சாதனையாக கருதப்படுகிறது.

உத்தகாண்டில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொண்டு யோகா செய்தார். அதுபோல நாடு முழுவதும் மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள், முப்படைகளைச் சேர்ந்த ராணுவத்தினர்,  மற்றும் சமுக நல அமைப்புகள் சார்பிலும் நாடு முழுவதும  அனைத்து தரப்பினரும் இன்று யோகா செய்து உலக யோக தினத்தை சிறப்பித்து வருகின்றனர்.

விசாகப்பட்டினத்தில் யோகா பயிற்சி நிறைவடைந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்,  ‘ “யோகா வயது, பின்னணி அல்லது எல்லைகளுக்கு அப்பாற்பட்ட அனைவருக்கும் பொதுவானது”  என்பதை உலக நாடுகளுக்கு எடுத்துரைத்தார்.