சென்னை: ரூ.80கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வள்ளுவர் கோட்டம் திமுக ஆட்சிக்கு வந்ததும் ரூ.80 கோடி செலவில் புனரமைக்கப்படும் என அறிவிக்கப்படடது. அதன்படி, வள்ளுவர் கோட்டம் வண்ணமயமாக புனரமைக்கப்பட்டு புது பொலிவுடன் காணப்படுகிறது. இதை இன்று முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார்.

திருவள்ளுவரின் நினைவாக 1974-1976 ஆம் ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் வள்ளுவர் கோட்டம் கட்டப்பட்டது. சென்னையில் மைய பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் ஒரு முக்கிய நினைவுச்சின்னமாக திருவாரூர் தேருடன், வள்ளுவர் சிலையுடன் அமைந்துள்ளது. இந்த வள்ளுவர் கோட்டம் முறையான பராமரிப்பின்றி காணப்பட்ட நிலையில், 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் புனரமைக்க முதல்வர் ஸ்டாலின் அறிவிறுத்தி, அதற்காக ரூ.80 கோடி ஒதுக்கப்பட்டது. இதையடத்து புனரமைப்பு பணிகள் நடைபெற்ற வந்தன.
அதன்படி புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தில், 1,330 திருக்குறள்களும் பளிங்கு கற்களில் செதுக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன. அய்யன் வள்ளுவர் கலையரங்கம் 1,548 இருக்கைகளுடன் அதிநவீன ஏர் கண்டிஷனர் வசதி செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் அங்குள்ள குறள் மணிமாடம் 1,330 திருக்குறள்களும் பளிங்கு கற்களில் செதுக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் நூலகம், 100 பேர் அமரக்கூடிய ஆராய்ச்சி மையம், மல்டி-லெவல் பார்க்கிங்: 164 வாகனங்கள் நிறுத்த வசதி, உணவகம் (கஃபெடேரியா) மற்றும் ஒலி-ஒளி காட்சிக்கூடம் உள்ளிட்ட புதிய வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையடத்து வள்ளுவர் கோட்டம் புதிய பொலிவுடன் காணப்படுகிறது. இதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.