ஒடிசாவில் பாஜக ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் முதலாமாண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

புவனேஸ்வரில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பேரணியில் உரையாற்றிய அவர், “கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்ட G7 உச்சி மாநாட்டில் நான் பங்கேற்றேன்” என்றார்.
“அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் என்னை அழைத்து கனடாவிலிருந்து திரும்பும் வழியில் அமெரிக்காவிற்கு வருகை தருமாறும் வாஷிங்டனில் தன்னுடன் இரவு விருந்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்,
ஒடிசாவின் ஜெகந்நாதரின் புனித பூமிக்கு வர முன்கூட்டியே திட்டமிட்டிருந்ததால் பணிவுடனும் மரியாதையுடனும், நான் மறுத்துவிட்டேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel