சென்னை: தமிழ்நாடு அரசு உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவிகளின் வழிகாட்டிய செயல்படுத்தி வரும் நான் முதல்வன் திட்டத்தில்  இணைந்து பயின்றி, தேசிய தேர்வான ஜெஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளி மாணவன் முகமது பாட்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்த மாணவர்,  இந்தியாவின் தலைசிறந்த  பல்கலைக்கழகமான  சென்னை ஐஐடியில் சேர்ந்துள்ளார். அங்கு   பி.டெக் உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் (B.Tech metallurgical and materials engineering) படிப்பில் படிக்க இருக்கிறார். அவரது படிப்பு செலவை தமிழ்நாடு அரசு ஏற்றுள்ளது.

ஏற்கனவே நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஜேஇஇ தேர்வில் தேர்ச்சிபெற்று மும்பை ஐஐடியில் படிக்க தேர்வாகியுள்ளார் மாற்றுத்திறனாளி மாணவி யோகேஸ்வரி.  சேலம் மாவட்டம் கல்வராயன் மலையைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பழங்குடி இன மாணவி, ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் இந்திய அளவில் 417வது இடம் பிடித்து ஐஐடியில் சேர தகுதி பெற்றுள்ளார்.  இவருக்கு  மும்பை ஐஐடியில் படிக்க இடம் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், கீழடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் முகமது பாட்ஷா என்பவர் அரசு பள்ளியில் படித்து, நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்து ஜேஇஇ தேர்வை எழுதிய நிலையில், அவர் தேசிய அளவில் 88வது இடம்பிடித்து தேர்வாகி உள்ளார். இதையடுத்து அவருக்கு சென்னை ஐஐடியில் படிக்க இடம்கிடைத்துள்ளது. சென்னை ஐஐடியில்  பி.டெக் உலோகவியல் மற்றும் பொருட்கள் பொறியியல் படிப்பை தேர்வு செய்துள்ளார்.

இந்த மாணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அவரது படிப்பு செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளார்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் ஜேஇஇ தேர்வில் வெற்றிபெற்று மும்பை ஐஐடியில் படிக்கப்போகும் மாற்றுத்திறனாளி மாணவி…