கேதார்நாத்

கேதார்நாத் செல்லும் மலைப்பதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகப்; புகழ்பெற்ற சிவதலமாப் கேதார்நாத் உத்தரகாண்டில் அமைந்துள்ளது. கேதார்நாத் சிவபெருமானின் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகும். பொதுவாக இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர்.

தற்போது பெய்து வரும் கனமழையால் ஜங்கிள்சாட்டி மலையேற்ற பாதையில் நேற்று காலை 11.20 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டு இதில்,2 பக்தர்கள் பலியானார்கள்.3 பேர் படுகாயமடைந்தனர்.

உயிரிழதவர்கள் யார், அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை பாதுகாப்புடன் மலையேற்ற பாதையில் கோயிலுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.