டெல்லி

ந்தியாவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரப்படி, நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 11 பேர் உயிரிழந்தனர்.  அதாவது கேரளாவில் 7 பேர், டெல்லி, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா ஒருவர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 7 ஆயிரத்தைத் தாண்டியது. நேற்று  ந்த எண்ணிக்கை 7 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்து 6,836 ஆக இருந்தது. அதிகபட்சமாக கேரளாவில் 1,920, குஜராத்தில் 1,433, டெல்லியில் 649, மகாராஷ்டிராவில் 540 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 14,772 பேர் குணமடைந்துள்ளனர்.