தென்காசி

தென்காசி முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது/

கடந்த 8 ஆண்டுகளா தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அன்னை முதியோர் இல்லத்தில் 60க்கும் மேற்பட்ட முதியோர்கள் தங்கி வந்தனர். பாட்டாகுறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் நடத்தி வந்த இந்த முதியோர் இல்லத்தில் கடந்த 11ந் தேதி மாமிச உணவு போடப்பட்டு உணவை உட்கொண்ட முதியோர்களுக்கு திடீரென ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வாறு ஒவ்வாமையால் பாதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  11 பேரில் செங்கோட்டை பகுதியை சேர்ந்த சங்கர் கணேஷ் (வயது 48), முருகம்மாள் (வயது 45), சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த அம்பிகா (வயது 40) ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  இதைத் தொடர்ந்து தனலட்சுமி (70) என்பவர் கடந்த 13ந் தேதி உயிரிழந்தார்.

தற்போது பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இடைகால் பகுதியை சேர்ந்த முப்புடாதி என்ற முதியவரும் தற்போது உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இங்கு உணவருந்திய 55 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அந்த காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.