நெலமங்களா

ர்நாடகாவை நடந்த சா;லை விபத்தில் இரு நடனக் கலைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூரு சிவராமபுராவை சேர்ந்த பிரஜ்வல் (வயது 22) மற்று, அதே பகுதியில் வசித்து வந்தவர் சகானா (21)  ஆகிய இருவரும் நடன கலைஞர்கள் ஆவார்கள். ஒருவரும் சில சினிமா படங்களில் இடம் பெற்றுள்ள பாடல்களுக்கு நடனமாடி உள்ளனர். இதுதவிர திருமணம், திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகளிலும் 2 பேரும் நடனமாடி வந்தார்கள்.

நேற்று முன்தினம் இரவு துமகூரு மாவட்டம் குனிகல்லில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு பிரஜ்வல், சகானா ஆகியோர் மோட்டார் சைக்கிளில் பெங்களூருவுக்கு வர. இரவு 11.30 மணியளவில் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அருகே பெங்களூரு-குனிகல் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

அதே சாலையில் அப்போது வந்த லாரி அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிரஜ்வல், சகானா ஆகியோர் பலத்தகாயம் அடைந்து உயிரிழந்தனர். நெலமங்களா போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர்.

விசார்ணையில் லாரியை டிரைவர் கவனக்குறைவாகவும், வேகமாகவும் ஓட்டியதே விபத்திற்கு காரணம் என்று தெரிய வந்தது. நெலமங்களா போக்குவரத்து போலீசார் இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்த லாரியை பறிமுதல் செய்துள்ளனர்