தஞ்சா: தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூ.97 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இரண்டு நாள் பயணமாக தஞ்சாவூரில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,194 கோடியிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.309 கோடியில் 127 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்தது. ரூ.325 கோடியில் 461 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். ரூ.325 கோடியில் 461 முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
சுமார் 2 லட்சம் பயனாளிகளுக்கு அரசின் நல திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார், பின்னர் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ரூ.97 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை அறிவித்தார்.
முதலமைச்சர் அறிவித்த திட்டங்களின் விவரம்:
*தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு கூடுதல் மானியம்: தஞ்சையில் உள்ள உலகப் புகழ்பெற்ற சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு கூடுதல் மானியம் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
*தென்பெரம்பூர் அருகே புதிய பாலம்: தென்பெரம்பூர் அருகே வெண்ணூறு-வெட்டாறு பிரியக்கூடிய இடத்தில் 42 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் அமைக்கப்படும். இது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.
*சாலையோர விரிவாக்கம் மற்றும் மேம்பாடு: ஈச்சங்கோட்டை முதல் வெடிக்காடு கால்வாய் வரை உள்ள சாலை 40 கோடி ரூபாய் மதிப்பில் அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும். இது போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*வாய்க்கால் மற்றும் மதகுகள் புனரமைப்பு: உப்பிற்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மற்றும் அதன் மதகுகள் 15 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இது விவசாயத்திற்கு பெரிதும் உதவும்.
*தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து அறிவித்தார். இந்த திட்டங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்துவதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு கூறினார்.