தஞ்சை : தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பல்வேறு முடிவுற்ற திட்டபணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதைத்தொர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் ஜூலை 15 முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறினார்.

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் நடக்கும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில், “மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சி செய்த சோழ நாட்டின் காற்றை சுவாசித்ததும் கம்பீரம் பிறக்கிறது. மேட்டூர் அணையையும், கல்லணையையும் குறித்த நேரத்தில் திறந்து வைத்திருக்கிறேன். 2021 முதல் டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப் படுகிறது.
இந்த ஆண்டு குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டத்துக்கு ரூ.82 கோடி ஒதுக்கீடு. காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியவர் கலைஞர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தையும் கலைஞரையும் பிரித்துப் பார்க்கமுடியாது. ராஜராஜ சோழனுக்கு சிலை வைத்தவர் கலைஞர். தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவை நடத்தியவர் கலைஞர்.
காவிரி நடுவர் மன்றமும், காவிரி ஆணையமும் அமைய காரணமானவர் கலைஞர். திமுக ஆட்சியில் தஞ்சை மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் ஒரத்தநாடு அருகே அதிதிறன் கொண்ட மெகா நேரடிக் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
திமுக ஆட்சியில் தஞ்சையில் ரூ.70 கோடியில் மினி டைடல் பார்க் திறக்கப்பட்டது. சரஸ்வதி மஹால் நூலகத்துக்கு கூடுதல் மானியம் வழங்கப் படும். சரஸ்வதி மஹாலில் உள்ள ஓலைச்சுவடிகள், அரிய புத்தகங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். வெண்ணாறு, வெட்டாறு பிரியக்கூடிய இடத்தில் ரூ.42 கோடியில் புதிய பாலம். ஈச்சங்கோட்டை முதல் வெட்டிகாடு வரை ரூ.40 கோடியில் சாலை விரிவாக்கம் செய்யப்படும்.
பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். உண்மை விவரங்களை தெரிந்துகொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிடுகிறார்.
உட்கட்சி பிரச்சனை, கூட்டணி பிரச்சனையை மறைக்க எடப்பாடி பழனிசாமி அறிக்கை அரசியல் செய்கிறார். உட்கட்சி பிரச்சினையை மறைக்க, எடப்பாடி பழனிசாமி அறிக்கை அரசியல் செய்கிறார். திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பை பழனிசாமியால் பொறுக்க முடியவில்லை.
ஜூலை 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிர் உரிமைத் தொகை பெற விண்ணப்பம் அளிக்கலாம்.”
இவ்வாறு கூறினார்.