டெக்ரான்: இஸ்ரேலிய மூன்று மாடி ட்ரோன் உற்பத்தி பட்டறை ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஈரானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் நடத்திய இன்றைய வான்வெளி தாக்குதலில் ஈரான் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில், ஈரான் தனது நாட்டில் தெஹ்ரான் பகுதியில் செயல்பட்டு வந்த இஸ்ரேலின் மொசாட் ட்ரோன் பட்டறையை இடித்து தள்ளியது. இதனால் இஸ்ரோல் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இஸ்ரோல், காசா உடையே போர் நடந்து வரும் நிலையில், காசாவுக்கு ஆதரவு அளித்து வந்த ஈரோன்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானை தாக்க திட்டமிட்ட இஸ்ரேல் தனது மொசாட் உளவுத்துறை மூலம் ஈரானுக்குள் முன்கூட்டியே ட்ரோன் தளத்தை நிறுவி அங்கிருந்து ஒரே நேரத்தில் ஏராளமான டிரோன்களை ஆபரேட் செய்து ஈரானை தாக்கியது. இதனால் ஈரானில் பெருத்த சேதம் ஏற்பட்டது. பல எண்ணை கிணறுகள் தீப்பிடித்து எரிந்தது.
மேலும், ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலால், ஈரானில் உள்ள ராணுவதளங்கள், அணுஆயுதம் தயாரிக்க பயன்படும் யுரேனியத்தை செறிவூட்டும் தளம் உள்ளிட்டவை கடுமையான சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரோன் இஸ்ரேல்மீது தீவிரமான தாக்குதலை நடத்தியது, இஸ்ரேல் எதிர்பாராத நேரத்தில் ஈரான் நடத்திய தாக்குதல்இஸ்ரேலை நிலைகுலைய செய்துள்ளத. அதாவது, ஈரான் மீதான இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது அந்த நாட்டின் ‛மொசாட்’ உளவுத்துறை என்பதை கண்டறிந்த ஈரான், இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை முறையை கையில் எடுத்து தாக்குதலை நடத்தியது.
முன்னதாக, ஈரோன், இஸ்ரேல் இடையேயான தூரம் 2,300 கிலோமீட்டர் . மேலும் இரு நாடுகளுக்கு இடையே ஈராக், ஜோர்டான் போன்ற நாடுகள் உள்ளன. இதனால், இஸ்ரோல் நேரடியாக ஈரான்மீது தாக்குதல் நடத்த முடியாது. அதாவது, ஈரானை இஸ்ரேல் தாக்க வேண்டும் என்றால் அது ஜோர்டான், ஈராக் வான்பரப்பை கடந்து தான் நடக்க வேண்டும். இதனால் இடையில் உள்ள நாடுகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதையடுத்து, இஸ்ரேல் புத்திசாலித்தனமாக மாற்று திட்டத்தை உருவாக்க முனைந்தது. அதானது , தனது உளவுத்துறையான மொசாட் மூலம், ஈரானிலேயே டிரோன் ஏவுதளம் அமைத்து, அதன்மூலம் ஈரான் பல பகுதிகளை நாசமாக்க முடிவு செய்தது. அதன்படி ஈரான் தலைநகர் டெக்ரானில் 3 அடுக்கு மாடிகளைக்கொண்டு, டிரோன் ஏவுதளத்தையும் வெற்றிகரமாக கட்டமைத்தது. கடந்த ஓராண்டுகளாக அங்கு ட்ரோன் வல்லுநர்களை இஸ்ரேல் அனுப்பி, ஈரானை தாக்குவதற்கான நடவடிகிகையை சிறப்பாக செய்து முடிந்தது. அதுவரை ஈரானும், அதுகுறித்து எந்தவொரு தகவல்களையும் தெரிந்து கொள்ளாமல் இருந்து வந்துள்ளது.
ஏற்கனவே ஈரானுக்குள் நுழைந்த ‛மொசாட்’ உளவுத்துறையை சேர்ந்தவர்கள் துல்லிய தாக்குதலுக்கான குண்டுவீச தேவையான ஏற்பாடுகளை யும் முன்கூட்டியே செய்து வைத்திருந்தனர். இந்த நிலையில்தான், ஈரோன்மீது ஒரே நேரத்தில் டிரோன்களை ஏவி ஈரானின் பல பகுதிகளை தாக்கியது. இது தாக்குதலுக்கு பின்னர்தான் தெரிய வந்தது. . இந்த ட்ரோன்கள் ஈரானின் வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்களை தாக்கி அழித்தன. இதனால் அதிர்ச்சி அடைந்தது. பின்னர் அதுகுறித்த தகவல்கள் வெளியா பிறகுதான் ஈரோன் ராணுவம், தெஹ்ரானில் நடத்திய தேடுதல் வேட்டையில், 3 ஆண்டு டிரோன் உற்பத்தி தளம் இருப்பதை கண்டறிந்தது.
மொசாட் அமைப்பின் இந்த செயல்பாடு உலகம் முழுவதும் அதிக கவனம் பெற்றது. முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவின் எரிபொருள் கிடங்கு மற்றும் விமான தளங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு முன்பாகவே ரஷ்யாவுக்கு தெரியாமலே உக்ரைன் அந்த நாட்டுக்குள் ட்ரோன்களை கொண்டு சென்று இருந்தது. லாரியில் இருந்த ட்ரோன்களை ஒரே நேரத்தில் ஆபரேட் செய்து ரஷ்யாவின் 40 போர் விமானங்களை அழித்தது உக்ரைன். அந்த வரிசையில் தற்போது இஸ்ரேல் தனது ‛மொசாட்’ உளவுத்துறையின் உதவியுடன் ஈரானில் ட்ரோன் தளம் அமைத்து ஈரானின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.
இதைத்தொடர்ந்து, உஷாரான ஈரோன் நடத்திய தேடுதல் வேட்டையில், இஸ்ரேலின் டிரோன் ஏவுதளம் ஈரான்தலைநகர் டெஹ்ரானில் இருந்பது தெரிய வந்தது.
ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை உள்கட்டமைப்பை குறிவைத்து நீண்டகாலமாக நடத்தப்பட்ட இரகசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை நிறுவனம் தெஹ்ரான் அருகே ஒரு ரகசிய ட்ரோன் தளத்தை நிறுவி அதன்மூலம், ஈரான் மீது தாக்குதல் நடத்தியது உறுதிப்படுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து, தெஹ்ரானில் செயல்பட்டு வந்த இஸ்ரேலிய ட்ரோன் உற்பத்தி மற்றும் தாக்கும் வசதிகள் கொண்ட மூன்று மாடி கட்டிடத்த்தை இடித்து நொறுக்கியது. இது இஸ்ரேலுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.